இசைஞானி பயோ பிக்கில் நடிக்கும் தனுஷ்.. பணிகளை துவங்கிய பிரபல இயக்குனர் - மீண்டும் இணையும் வெற்றி காம்போ!
Ilayaraja Bio Pic : இசைஞானி இளையராஜாவின் வாழ்கை வரலாறு படத்தில் பிரபல நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கடந்த ஆண்டே வெளியானது அனைவரும் அறிந்ததே.
Ilayaraja
கடந்த 1976 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "அன்னக்கிளி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது இசை பயணத்தை துவங்கிய மாபெரும் கலைஞன் தான் இளையராஜா. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில், பல்லாயிரம் பாடல்களை உயிரூட்டி இசைஞானியாக திகழ்ந்து வருகிறார் அவர்.
Dhanush
இந்த சூழ்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல இயக்குனரும், நடிகருமான தனுஷ் அவர்கள் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில், இளையராஜாவாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. இதனையடுத்து இந்த 2024ம் ஆண்டு அந்த திரைப்படத்திற்கான பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Arun Matheshwaran
இந்நிலையில் தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களின்படி, இளையராஜாவின் அந்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஏற்கனவே தனுஷ் அவர்களை வைத்து, "கேப்டன் மில்லர்" என்கின்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அருண் மாதேஸ்வரனுக்கு இது முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.