சென்சார் போர்டு தடைவிதித்த பாட்டு... கமல் படத்துக்காக பட்டி டிங்கரிங் பார்த்து வேறலெவல் ஹிட்டாக்கிய இளையராஜா
சென்சார் போர்டு அதிகாரிகளால் தடைசெய்யப்பட்ட பாடலை கமல் படத்தில் பயன்படுத்தி பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கி இருக்கிறார் இளையராஜா.
Ilaiyaraaja
இசை உலகின் ராஜாவாக திகழ்ந்து வருகிறார் இளையராஜா. அன்னக்கிளி படம் மூலம் அறிமுகமான இவர், 40 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இனிமையான இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இவர் இசையில் ஏராளமான ஹிட் பாடல்கள் வந்திருக்கின்றன. அதில் ஒரு பாட்டிற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் தடைவிதித்ததால், அதே ட்யூனை வைத்து கமல் படத்திற்காக மாஸ் ஹிட் பாடலை கொடுத்து அசத்தி உள்ளார் இளையராஜா.
censor Board Banned Ilaiyaraaja song
அது வேறெந்த பாடலும் இல்லை, நிலா காயுது நேரம் நல்ல நேரம் என்கிற பாடல் தான். இந்த பாடல் கமல்ஹாசன் நடித்த ‘சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்று இருக்கும். மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி குரலில் வெளிவந்த இந்த பாடல் இளையராஜாவின் மாஸ்டர் பீஸ் பாடல்களில் ஒன்றாகும். இன்றளவும் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்றால் இந்த பாடல் இடம்பெறாமல் இருக்காது. இந்த அளவும் ஹிட்டான இந்த பாடல் சகலகலா வல்லவன் படத்திற்கு போட்டப்பட்ட பாடல் இல்லையாம்.
இதையும் படியுங்கள்... முதல்வன் படத்தில் ரஜினி நடிக்காததற்கு காரணம் கலைஞரா? பல வருடங்களுக்கு பின் வெளிவந்த சீக்ரெட்
Nallathu Nadanthe theerum
1981-ல் காரைக்குடி நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த ‘நல்லது நடந்தே தீரும்’ என்கிற படத்துக்காக தான் இந்த பாடலை முதன்முதலில் கம்போஸ் செய்தாராம் இளையராஜா. அந்த பாடல் காட்சியை படமாக்கி படத்தை சென்சாருக்கு அனுப்பும்போது, இந்த பாட்டு இருக்கக்கூடாது இருந்தால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்களாம். இதனால் வேறுவழியின்றி அந்த பாடலையே படத்தில் இருந்து தூக்கிவிட்டதாம் படக்குழு.
Sakalakala Vallavan Nila Kayuthu Song
ஆனால் அந்த பாடல் ட்யூன் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்துப் போனதால், அதை வேறு படத்தில் பயன்படுத்திவிட ஆசைப்பட்டாராம். அப்போது தான் சகலகலா வல்லவன் படத்தின் கம்போஸிங் சமயத்தில் இந்த ட்யூனை போட்டுகாட்டி இருக்கிறார். அது அனைவருக்கும் பிடித்துப்போக அதன் பின்னர் அப்பாடலுக்கு ‘நல்லது நடந்தே தீரும்’ படத்தின் இயக்குனர் காரைக்குடி நாராயணனிடம் அனுமதி வாங்கி நிலா காயுது என்கிற பெயரில் உருவாகி இருக்கிறது. அப்பாடலும் வேறலெவல் ஹிட்டானதால் இளையராஜா செம்ம ஹாப்பி ஆகிவிட்டாராம்.
இதையும் படியுங்கள்... ஒரு முறை கூட அமெரிக்கா போனதில்ல... ஆனாலும் நியூயார்க் நகரத்தை வர்ணித்து வாலி பாடல் எழுதியது எப்படி?