உள்ளே? வெளியே? மங்காத்தா ஆடும் பாகிஸ்தான்: அமெரிக்காவை நம்பியே இருக்கும் பாக்.!
பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல வேண்டுமானால், இன்று நடைபெறும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா தோற்க வேண்டும்.

T20 World Cup 2024
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
USA vs IRE, T20 World Cup 2024
இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதே போன்று நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது.
Pakistan cricket Team
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் மட்டும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தது. ஆனால், அமெரிக்காவை விட அதிக நெட் ரன்ரேட் பெற்றுள்ளது.
Pakistan Super 8 Chance
இதன் காரணமாக இன்று நடபெறும் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது அமெரிக்கா வெற்றி பெற்றாலோ பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது.
T20 World Cup 2024 Points Table
ஆனால், இந்தப் போட்டியில் அமெரிக்கா தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். எனினும், பாகிஸ்தான் கடைசியாக நடைபெற இருக்கும் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும். இந்தப் போட்டி வரும் 16 ஆம் தேதி ஃப்ளோரிடாவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.