- Home
- Gallery
- ராம் சரண் வீட்டில் ரகசியமாக தங்கியிருந்த பிரபல நடிகை.. இதுதான் காரணமாம்.. அவங்களே சொன்ன தகவல்..
ராம் சரண் வீட்டில் ரகசியமாக தங்கியிருந்த பிரபல நடிகை.. இதுதான் காரணமாம்.. அவங்களே சொன்ன தகவல்..
மும்பையில் இருக்கும் நடிகர் ராம் சரண் வீட்டில் தான் ரகசியமாக தங்கியிருந்ததாக பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார். அவர் ஏன் அதை யாருக்கும் சொல்லாமல் மறைத்தார் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

Manchu Lakshmi
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் மோகன் பாபுவின் மகள் மஞ்சு லக்ஷ்மி, தொடர் பேட்டிகளை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் தனது தந்தையை மறைமுகமாக குற்றம் சாட்டினார்.
Manchu Lakshmi
தென்னிந்தியாவில் ஹீரோக்களின் மகள்களுக்கும், சகோதரிகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுவதில்லை என்று அவர் கூறியிருந்தார். மேலும் தான் நடிகையாவதை தனது தந்தை விரும்பவில்லை. எனவும், ஆணாதிக்க சமூகத்தில் தானும் பாதிக்கப்பட்டதாகவும் மஞ்சு லக்ஷ்மி கூறியிருந்தார்.
Manchu Lakshmi
தற்போது மஞ்சு லக்ஷ்மி தனது திரை வாழ்க்கைக்காக மும்பையில் வசித்து வருகிறார். தனது தோழிகளான ரகுல் ப்ரீத் மற்றும் ராணா ஆகியோர் தன்னை மும்பைக்கு வரும்படி கேட்டு ஊக்கப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். சமீபத்தில் மஞ்சு லக்ஷ்மி மற்றொரு பேட்டி அளித்த நிலையில், அதில் அவர் கூறிய கருத்துகள் வைரலாகி வருகிறது.
Manchu Lakshmi
அதில் பேசிய அவர் “ நான் மும்பைக்கு மாறிய போது எனக்கு அங்கு தங்குவதற்கு வீடு இல்லை. அப்போது ராம் சரண் வீட்டில் தான் நான் தங்கி இருந்தேன். ஆனால் நான் அங்கு தங்கியது யாருக்கும் தெரியாது. நான் உங்கள் வீட்டில் தான் இருக்கிறேன் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று ராம் சரணிடம் கூறினேன்.. நான் ஏன் சொல்லப்போகிறேன் என்று ராம் சரண் கேட்டார்.
Manchu Lakshmi
நான் ராம் சரண் வீட்டில் தங்கியிருப்பதை மறைக்க காரணம் இருக்கிறது. அது தெரிந்தால் மும்பையில் எனக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். நீங்கள் ராம் சரண் வீட்டில் தங்கியிருக்கிறீர்கள். எங்களிடமிருந்து உங்களுக்கு என்ன தேவை? என்று கேட்பார்கள். அதனால்தான் அதை ரகசியமாக வைத்திருந்தேன். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் என் வீட்டில் இருங்கள் என்று ராம் சரண் என்னிடம் கூறினார். ஆனால் சிறிது காலத்திலேயே நான் வாடகைக்கு அப்பார்ட்மெண்ட் எடுத்து மாறிவிட்டேன். நான் எத்தனை நாட்கள் அவரின் வீட்டில் தங்கி இருந்தேன் என்று கூட ராம்சரணுக்கு தெரியாது” என்று மஞ்சு லக்ஷ்மி தெரிவித்தார்.
Manchu Lakshmi
தொடர்ந்து பேசிய அவர் “ நாங்கள், 142 கலைஞர்களுடன் வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளோம். அதில் ராம் சரண், அல்லு அர்ஜுன், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் உள்ளனர். னும் உள்ளனர்.. அந்தக் குழுவில் தங்கள் படங்களின் டீஸர் மற்றும் டிரைலர்களை வெளியிடுவார்கள் . குழுவில் உள்ள அனைவரும் தங்கள் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் அவற்றைப் பகிர்ந்து கொள்வார்கள். அதனால்தான் குழு உருவாக்கப்பட்டது” என்றுகூறினார்..
manchu lakshmi
தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள மஞ்சு லக்ஷ்மி, தமிழில் கடல், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் படத்தின் மூலம் அவர் மலையாள திரையுலகிலும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.