- Home
- Gallery
- இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறலாம்.. எப்படி தெரியுமா?
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறலாம்.. எப்படி தெரியுமா?
NPS திட்டத்தின் மூலம் மாதம் 1 லட்சம் ரூபாய் ஓய்வூதியமாக பெறுவது எப்படி என்று பார்க்கலாம்

nps 3.jpg
நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஓய்வு காலத்திற்கு பின் நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ள பல ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில் முக்கியமான திட்டம் என்பிஎஸ் NPS (தேசிய ஓய்வூதிய அமைப்பு) திட்டம்.
இந்த திட்டம் ஒருவர் தனது ஓய்வுக்காக சேமிக்க உதவுகிறது. NPS என்பது உங்கள் ஓய்வூதிய வருமானத்தை அதிகரிப்பதற்கும் வரியைச் சேமிப்பதற்கும் மிகவும் திறமையான வழிகளில் ஒன்றாகும். NPS ஆனது திட்டமிட்ட முறையில் முறையான சேமிப்புடன் நிதி ரீதியாக பாதுகாப்பான ஓய்வூதியத்திற்கான தனிப்பட்ட திட்டத்திற்கு உதவுகிறது.
ஆனால் NPS திட்டம் கூட்டு வருமானத்தை வழங்குவதால், நீண்ட முதலீட்டு காலம் உங்கள் வருமானத்தை வேகமாக அதிகரிக்கும். NPS திட்டத்தின் மூலம் மாதம் 1 லட்சம் ரூபாய் ஓய்வூதியமாக பெறுவது எப்படி என்று பார்க்கலாம். ஒரு நபர் 21 வயதில் NPS இல் மாதம் ரூ 8,700 முதலீடு என, அடுத்த 39 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், அவர் 60 வயதிற்குள் மாதம் ரூ 1,00,000-க்கு மேல் ஓய்வூதியத்தைப் பெறுவார்.
மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெற NPSல் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? ஒருவர் தனது 21 வது வயதில் மாதம் ரூ.8,700 இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்தா 10% என்ற அளவில் அவருக்கு முதலீடு திரும்ப கிடைக்கும். எனவே அவர் மொத்தமாக ரூ.5,01,19,582-ஐப் பெறுவார்.
NPS rules eased from today-Things that'll change for pensioners
அந்த மொத்த தொகையில் இருந்து 60 சதவீதம் எடுத்தால் (60 சதவீதம் என்பது ஓய்வு பெறும் வயதில் நீங்கள் திரும்பப் பெறக்கூடிய அதிகபட்ச வரம்பு), அப்படியானால், உங்களுக்கு 40 சதவிகிதம் ஆண்டுத் தொகையாக இருக்கும்.
நிலையான வருமானத்தை உருவாக்கும் கடன் நிதிகள் அல்லது கார்ப்பரேட் பத்திரங்களில் அரசாங்கம் ஆண்டு தொகையை முதலீடு செய்கிறது. நீங்கள் ஒரு ஆண்டுத் தொகையில் ஆறு சதவீத வருமானத்தைப் பெற்றால், வருடாந்திரத்தில் முதலீடு செய்யப்படும் தொகை ரூ. 30,07,1749 ஆக இருக்கும். எனவே அவர் 60 வயதுக்கு பிறகு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,00,239 பெற முடியும்.
NPS இல் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. எனவே இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன் தங்கள் முதலீட்டு ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.