- Home
- Gallery
- குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ.. இவங்களுக்கு தான் அதிக சம்பளம்..
குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்களின் சம்பள விவரம் இதோ.. இவங்களுக்கு தான் அதிக சம்பளம்..
குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிக பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது 5-வது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரியில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு ஏப்ரல் மாதன் தான் தொடங்கியது. தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி வந்த குழு, இயக்குனர், நடுவர் ஆகியோர் அடுத்தடுத்து நிகழ்ச்சியில் இருந்து விலகியே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பல பிரச்சனைகள் தாமதங்களுக்கு பின்னர் புதிய நடுவர், புதிய கோமாளிகள் என புதுப்பொலிவுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன்படி இதுவரை 4 சீசன்களிலும் தாமு, வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவராக இருந்த நிலையில் வெங்கடேஷ் பட் திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல், திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சூப்பர் சிங்கர் பூஜா, யூடியூபர் இர்ஃபான், பிரபல தொகுப்பாளினி பிரியங்கா, நடிகை சுஜிதா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
அதே போல் ஏற்கனவே இருந்த கோமாளிகளுடன் ராமர், கேபிஒய் வினோத், அன்ஷிதா, ஷப்னம் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சுஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் ஒரு எபிசோடுக்கு தலா ரூ.18,000 சம்பளம் வாங்குகிறார்களாம்.
விடிவி கணேஷ், இர்ஃபான் ஆகியோர் ஒரு நாளைக்கு தலா ரூ.15,000, திவ்யா துரைசாமி ஒரு எபிசோடுக்கு ரூ.12,000 சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அதே போல் ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல் ஆகியோர் ஒரு நாளைக்கு ரூ.10,000 சம்பளம் வாங்குவதாகவும் பாடகி பூஜா வெங்கட் ஒரு எபிசோடுக்கு ரூ.9000 சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.