School Holidays: பள்ளி மாணவர்களுக்கு வெளியான குட்நியூஸ்! எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ?
School Holidays in Tamilnadu for September : தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
School Holidays in Tamilnadu for September
தமிழகத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான நாள்காட்டியில் செப்டம்பர் 20 முதல் 27ம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் எனவும், செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை காலாண்டு தேர்வுக்கான விடுமுறை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியில் ஆசிரியர்கள் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
September Quarterly Exam Time Table
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் காலாண்டு தேர்வு கால அட்டவணையை விட மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். செப்டம்பர் மாதம் பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளது. இம்மாதத்தில் செப்டம்பர் 7ம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதூர்த்தியும், செப்டம்பர் 16ம் தேதி மிலாடு நபி விடுமுறை என மொத்தம் 2 நாட்கள் விடுமுறை வருகிறது.
School Exam
முதல் நாள் செப்டம்பர் 20 வெள்ளிக்கிழமை அன்று முதல் பாடத்திற்கான காலாண்டு தேர்வு நடைபெறுகிறது. அடுத்த இரண்டு நாட்கள் வார விடுமுறையும், செப்டம்பர் 23ம் தேதி திங்கள் அன்று அடுத்த பாடத்திற்கு தேர்வு நடத்தப்படும். இந்த ஒருவாரத்தில் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்படும். செப்டம்பர் 28ம் தேதி சனி அன்று கடைசி தேர்வு நடைபெறும். இதையடுத்து காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்கிவிடும். வழக்கமாக ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்தமுறை 4 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது.
School Holiday
அதன்படி, செப்டம்பர் 29 ஞாயிறு, செப்டம்பர் 30 திங்கள், அக்டோபர் 1 செவ்வாய், அக்டோபர் 2 புதன் ஆகியவையாகும். இதில் ஒருநாள் வார விடுமுறை வந்து விடுகிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை. அப்படி பார்த்தால் காலாண்டு தேர்வு விடுமுறை 2 நாட்கள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.