மீதமான சாதத்தை பிரிட்ஜில் எத்தனை நாட்களுக்கு வைக்கலாம்? சாப்பிடலாம்?
Cooked Rice In Fridge : மீந்துபோன சாதத்தை பிரிட்ஜில் எத்தனை நாட்களுக்கு வைத்து சாப்பிடலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
தற்போது நாம் அனைவரும் அவசரகால உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்படியெனில், சமைக்க கூட நேரம் இல்லாத அளவுக்கு, ஏற்கனவே சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் சேமித்து, பிறகு மறுநாள் அதை சூடு படுத்தி சாப்பிடுகிறோம்.
இந்த பழக்கம் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது நேரத்தை மிச்சம் படுத்தும் என்றாலும், உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா?
அந்தவகையில், பல பெண்கள் ஃப்ரிட்ஜில் மீந்த சாதத்தை சேமித்து பயன்படுத்துவார்கள். ஆனால், அதை எத்தனை நாளைக்கு ஃப்ரிட்ஜில் வைக்கலாம்? அதிக நாள் வைத்து சாப்பிட்டால் என்ன ஆகும் என்பது போன்ற கேள்விக்கான பதில்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஃபிரிட்ஜை பராமரிப்பது எப்படினு தெரியவில்லையா..? அப்ப முதல் இத படிங்க..
நீங்கள் ஃப்ரிட்ஜில் சாதத்தை வைத்து பயன்படுத்த விரும்பினால், அதை கண்டிப்பாக இரண்டு நாட்களுக்குள் சாப்பிட்டு இருக்க வேண்டும். முக்கியமாக காற்று புகாதபடி ஒரு பாத்திரத்தில் சாதத்தை வைத்து பிறகு பிரிட்ஜில் வையுங்கள்.
ஒருவேளை ஃப்ரிட்ஜில் வைத்த சாதத்தில் இருந்து கெட்ட வாசனை வந்தால், அதை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். ஏனெனில் பாக்டீரியாக்கள் அதில் பெருகி இருக்கும். மீறி சாப்பிட்டால் ஃபுட் பாய்சன், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
இதையும் படிங்க: உங்க ஃப்ரிட்ஜ் வாடையில்லாமல் எப்பவும் வாசனையாக இருக்க சூப்பரான டிப்ஸ்...!.கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!
முக்கியமாக, சாதத்தை பிரிட்ஜில் இருந்து எடுத்த உடனே சாப்பிடக்கூடாது. சிறிது நேரம் அறையின் வெப்பநிலையில் வைத்த பிறகுதான் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.