- Home
- Gallery
- 1 டிபி ஸ்டோரேஜ்.. OLED டிஸ்ப்ளே.. இந்தியாவே எதிர்பார்க்கும் ஹானர் 200 சீரிஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல்!
1 டிபி ஸ்டோரேஜ்.. OLED டிஸ்ப்ளே.. இந்தியாவே எதிர்பார்க்கும் ஹானர் 200 சீரிஸ்.. அப்படி என்ன ஸ்பெஷல்!
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானர் புதிய போன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போன்கள் Honor 200 series என்ற பெயரில் கொண்டு வரப்படுகிறது. Honor 200 மற்றும் Honor 200 Pro மொபைலில் என்ன வகையான அம்சங்கள் உள்ளன? விலை எவ்வளவு? போன்றவற்றின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Honor 200
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானர் (Honor) புதிய தொடரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போன்கள் Honor 200 மற்றும் Honor 200 Pro என்ற பெயர்களில் வெளியிடப்படுகின்றன. இந்த போன்கள் விரைவில் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.
Honor 200 Price
ஹானர் 200 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் HD+ வளைந்த OLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. 2664 x 1200 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் வழங்கப்படும். இந்த திரை 400 nits உச்ச பிரகாசம் கொண்டது. ஹானர் 200 ஆனது Qualcomm Snapdragon 7 Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
Honor 200 Specs
இந்த போன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுடன் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 எம்பி பின்புற கேமரா மற்றும் 50 எம்பி முன் கேமரா வழங்கப்படும். ஹானர் 200 ப்ரோ ஸ்மார்ட்போனைப் பொறுத்தவரை, இது 6.78 இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
Honor 200 Display
இந்த போனில் 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் உள்ளது. Qualcomm Snapdragon 8S Gen 3 சிப்செட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 50 எம்பி பின்புற கேமரா மற்றும் 50 எம்பி முன் கேமரா கொண்டிருக்கும். விலையைப் பொறுத்தவரை, ஹானர் 200 ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட்டின் விலை ரூ. 31,000.
Honor 200 Pro
மேலும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ. 37,000 ஆக இருக்கும். ஹானர் 200 ப்ரோ 12 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ. 40 ஆயிரம், 16 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் விலை ரூ. 51,00 என மதிப்பிடப்பட்டுள்ளது.