School College Holiday: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
மகான் ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School Holiday
பொதுவாக முக்கிய பண்டிகை மற்றும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களை முன்னிட்டு அம்மாட்ட ஆட்சியர்களே முடிவு எடுத்து உள்ளூர் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறையால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வருகின்றனர்.
School Leave
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறையால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், மகான் ஸ்ரீ நாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள 3 வட்டங்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Holiday: குட்நியூஸ்! ஆகஸ்ட் 24, 25, 26 ஆகிய 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!
School College Holiday
அதன்படி அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய 3 வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மற்றொரு சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.