பீட்சா முதல் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரை - கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த ஹிட் & பிளாப் பட லிஸ்ட் இதோ!
Director Karthik Subbaraj : பெரிய அளவில் சினிமா பின்புலம் இல்லாத இயக்குனர்கள் பலர் தற்பொழுது தமிழ் சினிமாவில் சாதனைகள் பல படைத்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறார் கார்த்திக் சுப்புராஜ் என்றால் அது மிகையல்ல.
Pizza Movie
கடந்த 2012 ஆம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "பீட்சா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தவர் தான் கார்த்திக் சுப்புராஜ். அதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கண்டது. இந்நிலையில் இவருக்கு பெரிய அளவில் வெற்றியும் அதே சமயத்தில் பிளாப்பும் கொடுத்த திரைப்படங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Iraivi Movie
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல் முதலில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி கண்டது. அதேபோல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான "இறைவி" திரைப்படத்திற்கு ஒரு ரசிகர் கூட்டம் இன்றளவும் உள்ளது, அந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Jigarthanda
இந்த 2023 ஆம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் வெளியாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்துள்ளது. தீபாவளிக்கு வெளியான படங்களில் தற்போது சக்கைபோடு போடும் படமும் அதுதான். அதேபோல கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
Petta Movie
அதேபோல இவருடைய இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படம் ஒரு மெகா ஹிட் திரைப்படமாக மாறியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கிளாசிக் நடிப்பை இந்த பார்த்ததாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர். அதேபோல தனுஷின் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஜகமே தந்திரம் திரைப்படமும் இவருக்கு வெற்றி திரைப்படங்களாக மாறியது.
Mahaan Movie
ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்ட "மெர்குரி" திரைப்படமும், 2022 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான "மகான்" திரைப்படமும் விமர்சன ரீதியாக வெற்றியைப் பெற்றாலும், வியாபார ரீதியாக அவருக்கு பெரிய அளவில் வெற்றிகளை கொடுக்காத திரைப்படம் என்று கூறலாம்.