உத்தரகாண்டில் பிரதமர் மோடி: கைலாசத்தில் சிவனுக்கு சிறப்பு வழிபாடு செய்யும் புகைப்படங்கள் இதோ!!
பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் உள்ள பார்வதி குந்த் என்ற இடத்தில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இங்கே..
PM Modi in Parvati Kund
பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் இன்று சென்றார். இங்கு ஜோலிங்காங்கில் உள்ள பார்வதி குந்தில் பிரார்த்தனை செய்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஆதிகைலாசத்தில் ஆசி பெற்றார்.
PM Modi in Uttarakhand
பிரதமர் மோடி இங்கிருந்து அருகில் இருக்கும் கிராமத்தை அடைந்தார். அங்கு அவர் ராணுவம் மற்றும் ITBP ஜவான்களை சந்தித்து ஊக்கப்படுத்தினார். பின் உள்ளூர் மக்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அல்மோராவில் உள்ள ஜாகேஷ்வருக்கு பிரதமர் மோடி சென்றார். இங்குள்ள ஜாகேஷ்வர் தாமில் வழிபாடு செய்தார். சுமார் 6200 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜாகேஷ்வர் தாம், சுமார் 224 கற்கோயில்களைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: உத்தரகாண்ட் செல்லும் பிரதமர் மோடி - 4200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்!
PM Modi
இதைத்தொடர்ந்து பிரதமர் மதியம் 2:30 மணிக்கு பித்தோராகரை சென்றடைந்தார். ஊரக வளர்ச்சி, சாலைகள், மின்சாரம், பாசனம், குடிநீர், தோட்டக்கலை, கல்வி, சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் சுமார் 4200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: இந்தியா உலகளாவிய வளர்ச்சிக்கான சக்தியாக உள்ளது: IMF அறிக்கை குறித்து பிரதமர் மோடி கருத்து
பார்வதி குந்தின் கரையில் அமைந்துள்ள பழமையான சிவன் பார்வதி கோவிலில் பிரதமர் மோடி ஆரத்தி செய்யும் காட்சி. அப்போது, பிரதமர் மோடியுடன் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆதி கைலாசத்தை தரிசனம் செய்ய முடிந்ததில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காகவும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவும் பிரார்த்தனை செய்ததாக குறிப்பிட்டார். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துகள் என்று பிரதமர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .