இளம் வயதில் திருமணமா? உடனே ஓ.கே சொல்லாதீங்க.. முதல்ல 'இத' படிங்க!
Disadvantages Of Marrying Young : பலர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், இப்படி திருமணம் செய்து கொண்டால் அவர்கள் பிரச்சினைகள் என்ன தெரியுமா?
Disadvantages Of Marrying Young
நம்முடைய சமூகத்தில் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால், குடும்பத்தின் அழுத்தத்தால் பலர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதுவும் குறிப்பாக பெண்கள் தான் அதிகம்.
Disadvantages Of Marrying Young
திருமணம் என்பது அது உங்களுடைய முடிவுவாக தான் இருக்க வேண்டும். ஆனால், காதல், அறியாமை முடிவுகள், குடும்பத்தின் அழுத்தங்கள் போன்றவற்றால் சிலர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் இப்படி அவசர அவசரமாக திருமணம் செய்பவர்களின் வாழ்க்கையானது விரைவில் முடிந்து விடுகிறது. எனவே, இந்த கட்டுரையில் இளம் வயதில் திருமணம் செய்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி பார்க்கலாம்.
Disadvantages Of Marrying Young
ஒன்று... இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டால் ஆண் பெண் என இருவருக்கும் சுதந்திரமாக வாழ்வது தடுக்கப்படுகிறது. மேலும் அவர்களது வாழ்க்கையும், ஆசைகளும் குடும்ப பொறுப்புகளுக்கு நடுவில் நசுக்கப்பட்டு புதைக்கப்படும்.
Disadvantages Of Marrying Young
இரண்டு.. இளம் வயதிலேயே திருமணம் செய்பவர்களால் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய முடியாது. ஏனென்றால், அவர்கள் செட்டில் ஆவதற்கு முன்பாகவே, திருமணம் செய்து கொண்டதால்தான். இதனால், அவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் குடும்ப உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் பலமுறை நிதி பிரச்சனைகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும்.
Disadvantages Of Marrying Young
மூன்று.. இளம் வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்றெடுக்கும் தாய்க்கு குழந்தையை எப்படி பராமரிப்பது என்பது அவர்களுக்கு தெரியாது. குறிப்பாக, இது தாய் மற்றும் குழந்தையின் வளர்ச்சியை மோசமாக பாதிக்கும்.
Disadvantages Of Marrying Young
நான்கு.. பொதுவாகவே, பெண்கள் தான் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கின்றனர். காரணம் அவர்களது பெற்றோர்கள். இன்னும் சில பெண்களிக்கோ குழந்தை திருமணமும் நடக்கின்றது. இந்த திருமணத்தால் பெண்கள் தங்களது கல்வி மற்றும் கல்வி கற்கும் உரிமையையும் இழக்கிறார்கள். தங்களது எதிர்கால நல்வாழ் தொடர்பான முடிவுகளையும் அவர்கள் எடுக்கவும் ரொம்பவே பயப்படுகிறார்கள்.
Disadvantages Of Marrying Young
ஐந்து.. இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். மனம் மற்றும் உடல் முதிர்ச்சி இல்லாததாலும், குடும்ப பொறுப்புகளை சுமக்க முடியாமலும், தங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர். இதனால் பல நோய்களுக்கு அவர்கள் ஆளாக நேரிடும்.