கல்லீரல் கொழுப்பு ஈசியாக குறைக்க இந்த அஞ்சுல ஒன்னு குடிங்க.!!
Best Juice For Fatty Liver : கொழுப்பு கல்லீரல் பிரச்சனை மோசமான வாழ்க்கை முறை, உணவு பழக்கம் அல்லது ஏதேனும் நோய் காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட இந்த 5 ஜூஸ்களில் ஒன்றை குடித்தால் போதும்.
கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான ஒரு உறுப்பு ஆகும். இதன் வேலை உடலில் இருக்கும் அனைத்து உணவுகளில் இருந்தும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதாகும். இருப்பினும் மாறிவரும் வாய்ப்பு முறை மற்றும் தவறான உணவு பழக்க வழக்கங்கள் கல்லீரல் பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றது. கொழுப்பு கல்லீரல் இந்த பிரச்சினைகளில் ஒன்றாகும்.
இந்த சிக்கலை தவிர்க்க உங்கள் உணவுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கல்லீரலுக்கு நன்மை பயக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த நோயை சுலபமாக தவிர்க்கலாம். எனவே, கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் நன்மை பயக்கும் 5 ஜூஸ்களை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். அதன் நுகர்வு கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
பீட்ரூட் ஜூஸ் : பீட்ரூட் ஜூஸ் கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும் இதில் ஏராளமான பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் உடலுக்கு கல்லீரலுக்கும் நன்மை பயக்கும் ஆக்சிஜனேற்றங்கள் உள்ளது. இரத்தத்தை சுத்திகரிக்கும் கலவைகள் பீட்ரூட்டில் உள்ளது. இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் முற்றிலும் நீங்கும்.
நெல்லிக்காய் ஜூஸ் : வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் ஜூஸ் கல்லீரல் நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, முடி மற்றும் சரும பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். மேலும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கும்.
ஆரஞ்சு ஜூஸ் கல்லீரலை நச்சு தன்மையாக உதவுகிறது மற்றும் நாள்பட்ட கல்லீரல் நோயை தடுக்கும். ஏனெனில், ஆரஞ்சில் பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது கல்லீரல் செல்களை நச்சுக்களால் சேதப்படுத்தாமல் பாதுகாக்கிறது.
இதையும் படிங்க: இந்த உணவுகள் கல்லீரலுக்கு எமன்! அவை மதுவை விட மோசமான விளைவை ஏற்படுத்துமாம்.. ஜாக்கிரதை..!
தர்பூசணி ஜூஸ் : தர்ப்பூசணி ஜூஸ் குடிப்பது கல்லீரலுக்கு மட்டுமல்ல, முழு உடலுக்கும் நன்மை பயக்கும். ஏனெனில், இதில் கலோரிகள் மிக குறைவாக இருப்பதால் தான். இந்த ஜூஸை குடித்து வந்தால் உடலை நீரேற்றுமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைக்கும். மேலும், ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்பு மற்றும் கல்லீரல் நோய்களுக்கு நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: இயற்கையாகவே கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் இவை தான்.. தவறாமல் சாப்பிடுங்க..
இஞ்சி எலுமிச்சை ஜூஸ் : காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி எலுமிச்சை சாறு கலந்த ஜூஸை குடித்து வந்தால் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மைக்கு உதவுகிறது. இதை தினமும் குடித்து வந்தால் கொழுப்பு கல்லீரலில் இருந்து பாதுகாக்கிறது.