தண்ணீர் குடிக்கும் போது செய்யக்கூடாத 4 தவறுகள் இவையே.. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!!
Common Mistakes When Drinking Water : தண்ணீர் குடிக்கும் போது நாம் செய்யக்கூடாத நான்கு தவறுகள் என்ன என்பதை குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
நாள் முழுவதும் நீரேற்றத்துடன் இருக்கவும், பல ஆரோக்கிய நன்மைகளை பெறவும், ஒருவர் போதுமான அளவு மற்றும் சரியான முறையில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்.
அந்த வகையில், நாம் தண்ணீர் குடிக்கும் போது சில தவறுகளை செய்கிறோம். அது எந்த மாதிரியான தவறுகள், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
நாம் சாப்பிட உடனே தண்ணீர் குடித்தால் செரிமானத்தில் மோசமான விளைவு ஏற்படுத்தும். இதனால் அஜீரணம் மற்றும் வீக்கம் ஏற்படும். எனவே சாப்பிட்ட உடனே ஒருபோதும் தண்ணீர் குடிக்காதீர்கள்.
அதுபோலவே, பெரும்பாலும் நாம் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால், இப்படி செய்வது தவறு. இப்படி நின்று கொண்டு தண்ணீர் குடித்தால், அது மூட்டுகளில் வலியையும், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சனையையும் உண்டாக்கும்.
இதையும் படிங்க: நின்றுகொண்டே தண்ணீர் குடிப்பீங்களா? அப்ப முதல்ல இந்த ஆபத்துகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!
முக்கியமாக, நாம் தண்ணீர் குடிக்கும் போது தொடர்ந்து வாய் எடுக்காமல் குடிப்போம். ஆனால் இதுவும் தவறு. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, நாம் தண்ணீர் குடிக்கும் போது வாய் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்.
இதையும் படிங்க: உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா? தெரிஞ்சுக்க இதை படிங்க..
ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக குடித்தால், அது சிறுநீரகத்தில் கூடுதல் அழுத்தத்தை உண்டாக்கும்.