- Home
- Gallery
- சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் அலர்ட்!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Rain
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 08ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Chennai Rain
அதேபோல், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: பயணிகளே முக்கிய செய்தி! சென்னையில் இன்று முதல் மின்சார ரயில்கள் ரத்து! எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா?
Chennai Heavy Rain
இதனிடையே நேற்று இரவு சென்னையில் கோயம்பேடு, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், குன்றத்தூர், கோவூர், வியாசர்பாடி, பெரம்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர், விநாயகபுரம், கொரட்டூர், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, வள்ளுவர் கோட்டம், வடபழனி, அடையாறு உள்ளிட்ட இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.
இதையும் படிங்க: 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவரா நீங்கள்? அப்படினா பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!
chennai rain
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமாலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.