தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கனமழை பெய்யப்போகுது.. வானிலை மையம் அப்டேட்.. எந்த இடங்கள் தெரியுமா.?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tamil Nadu Weather
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Tamil Nadu Weather Update
தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
Weather Update
நாளை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடிக்கடி மலாய் விட்டு விட்டு பெய்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 32 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
TN Weather Update
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
TN Weather Today
மேலும், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பூர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..