- Home
- Gallery
- Tamilnadu weatherman: இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை.. லிஸ்ட் போட்ட தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
Tamilnadu weatherman: இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை.. லிஸ்ட் போட்ட தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
தமிழ்நாட்டில் இன்று இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கப்போகிறது என்ற தகவலை பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Tamilnadu Rain
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Tamilnadu Heavy Rain
15ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Heavy Rain
16 மற்றும் 17ம் தேதி முதல் தமிழகத்தில் அநேக இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 18 மற்றும் 19ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை மையத் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,
தென்தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
Tamilnadu Weatherman
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: ராமநாதபுரம் மற்றும் டூட்டி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று தென்தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். கனமழை பெய்யும் பகுதிகள்- கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும்.
Tamilnadu Weatherman Pradeep John
மழை பெய்யும் மாவட்டங்கள் - சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.