சென்னை உட்பட 6 மாவட்டங்களில் அலறவிடபோகுதாம் மழை! அடுத்த 3 மணி நேரம் வரை! வானிலை மையம் அலர்ட்.!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இந்த 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் காலை முதல் சென்னையில் மெரினா, எம்.ஆர்.சி. நகர், அடையாறு, திருவான்மியூர், கோயம்பேடு, நெற்குன்றம், முகப்பேர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்து 3 மணிநேரத்திற்கு அதாவது 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.