பட்ஜெட்டில் வெளிநாட்டு சுற்றுலா போகனுமா? ரூ.5000-க்கும் குறைவான செலவில் செல்ல கூடிய நாடுகள் இதோ!!
ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவாக செலவில் பயணம் செய்ய கூடிய நாடுகள் பற்றி விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
பூரி, இந்தியா
பூரியில் ஒரு அறையின் சராசரி விலை ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை இருக்கும். நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றான பூரி, சார் தாம்ஸ் எனப்படும் இந்தியாவின் நான்கு புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.
கோன் கேன், தாய்லாந்து
தாய்லாந்தின் டைனோசர் நகரம், கோன் கேனில் சராசரியாக ரூ.2,500 விலையுள்ள ஹோட்டல் அறைகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நவநாகரீக காபி கடைகளில் லவுஞ்ச் அல்லது நகர ஏரிகளைப் பார்வையிடவது உட்பட கோன் கேனில் அனுபவிக்க ஏராளம் இருக்கிறது.
சிபு, மலேசியா
போர்னியோவின் சரவாக் மாநிலத்தில் அமைந்துள்ள சிபு, ஒரு உயிரோட்டமான உணவுக் காட்சி, வளமான வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்துடன் கவனிக்கப்படாத வசீகரத்தைக் கொண்டுள்ளது, இங்கு ஒரு இரவுக்கு ரூ. 2,800க்கு கீழ் ஒரு நல்ல ஹோட்டல் தங்குவதற்கு கிடைக்கும்.
சுரகர்த்தா (சோலோ), இந்தோனேசியா
பொதுவாக சோலோ என்று அழைக்கப்படும் சுரகர்த்தா மத்திய ஜாவாவில் அதிகார மையமாக இருந்து வருகிறது. சோலோனிஸ் நடனம் மற்றும் வயாங் பொம்மலாட்டம் முதல் கையால் வடிவமைக்கப்பட்ட பாடிக் வரை, கலை மரபுகள் மற்றும் அதன் மீது பெருமை கொள்ளும் ஒரு நகரமாக உள்ளது. இங்கு ஒரு இரவுக்கு சுமார் 3,100 ரூபாய் மட்டுமே செலவாகும்.
பேகோலோட், பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸின் சிட்டி ஆஃப் ஸ்மைல்ஸ், என்றழைக்கப்படும் பேகோலோட்டில் சராசரியாக தங்குவதற்கு ரூ.3,900 செலவாகும். இந்த நகரம் இனிமையான மற்றும் மென்மையான உள்ளூர் மக்களால் நிறைந்துள்ளது, அவர்கள் பார்வையாளர்களுக்கு எப்படி ஒரு சமையல் அனுபவத்தை வழங்குவது என்பதை அறிந்துள்ளனர்.
நின் பின், வியட்நாம்
நின் பின்னின் மகத்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு சுற்றித் திரிந்தவர்களை திகைக்க வைத்துள்ளது. நாட்டின் தலைநகரான ஹனோயில் இருந்து ஒரு மணி நேர தூரத்தில் உள்ள இந்த நகரத்தில் தங்க தோராயமாக ரூ.3900 செலவு மட்டுமே ஆகும்.
சிபா, ஜப்பான்
டோக்கியோவிலிருந்து ஒரு குறுகிய ரயில் பயணம், ஜப்பானில் உள்ள சிபாவில் சுற்றுலாப் பயணிகளுக்கென பல விஷயங்கள் உள்ளன. மகுஹாரி கடற்கரைப் பூங்கா போன்ற பொழுதுபோக்கு மற்றும் ஈர்ப்புகளின் பரபரப்பான மையமான இந்த நகரம், ஒரு நல்ல தங்குமிடத்திற்கு ஒரு இரவுக்கு ரூ.5,700 செலவாகும்.
குவாங்ஜு, தென் கொரியா
பட்டியலில் மிகவும் விலையுயர்ந்த இடம் தென் கொரியாவில் உள்ள குவாங்ஜூ ஆகும், அங்கு இரவு தங்குவதற்கு ஒரு இடத்தை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் ரூ.7,500 செலவழிக்க வேண்டி வரும். ஆனால் அனுபவம் மதிப்புக்குரியது. கலாச்சாரம் மற்றும் கலை நகரம் என்று அழைக்கப்படும் குவாங்ஜுவில் கலை, நாடகம் மற்றும் அருங்காட்சியகங்களும் இங்கு உள்ளன.