- Home
- Gallery
- முடி கொட்டுதா..? உடம்புல இந்த அறிகுறிகள் தெரியுதா..? அப்ப இந்த பிரச்சினை தான் காரணம்.. ஜாக்கிரதை!
முடி கொட்டுதா..? உடம்புல இந்த அறிகுறிகள் தெரியுதா..? அப்ப இந்த பிரச்சினை தான் காரணம்.. ஜாக்கிரதை!
தோல் மற்றும் முடி தொடர்பான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மோசமான குடல் ஆரோக்கியம் தான் காரணம். இதற்கான அறிகுறிகள் இங்கே..

நம் ஒவ்வொருவருக்கும் வரும் நோய்களில் பாதி வயிறுடன் தொடர்புடையது என்று உங்களுக்கு தெரியுமா? அதாவது, நேரடியாக வயிற்று எரிச்சல் இருந்தால் உங்கள் ஆரோக்கியமும் மோசமாக உள்ளது என்று அர்த்தம். குடல் ஆரோக்கிய மோசமாக இருப்பதை முழு உடலிலும் தெரியும் என்று நிபுணர்கள் கூறுகின்றன.
குறிப்பாக, உங்கள் தோல் மற்றும் முடியின் மீது இந்த அறிகுறிகள் தென்படும். இவற்றின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். சரி, இப்பொழுது குடலுக்கும் தோலுக்கும் முடிக்கும் என்ன சம்பந்தம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குடல் ஆரோக்கிய மோசமாக இருந்தால் உங்கள் தோல் மற்றும் கூந்தலில் பல அறிகுறிகள் தோன்றும். முக்கியமாக, பாருங்கள், வறட்சி, அரிக்கும் தோலழற்சி, பொடுகு, முடி உதிர்தல், ரோசாசியா போன்றவை.
உண்மையில், குடல் நுண்ணுயிரியில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக இது மாதிரி நிகழ்கிறது. மேலும், குடலில் வீக்கம் காரணமாக ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாமல் போகிறது இதனால் தோல் மற்றும் முடி பாதிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: செரிமான பிரச்சனை இருக்கா? அப்ப இந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீங்க..
எனவே, நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதாவது, நார்ச்சத்து பயோட்டிக் மற்றும் போதுமான அளவு நீரேற்றம் மூலம் சரிவிகித உணவை சாப்பிடுவதன் மூலம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இதையும் படிங்க: பெண்கள் தலைமுடி உதிர்வுக்கு இதுதான் காரணம்.. அதை எப்படி நிறுத்துவது தெரியுமா..?
இதன் மூலமாக நன்மை தரும் பாக்கியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அலர்ஜிகள் குறைந்து, ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதல் மேம்படுத்தப்படும். சருமம் தெளிவாக இருக்க, குடல் ஆரோக்கியம் சீராக இருப்பது அவசியம். எனவே, உங்களை போதுமான அளவு நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல ஒட்டு மொத்த ஆரோக்கியமும் வலுவாக இருந்தால் முடியும் வலுவாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
குடல் ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிக்க ப்ரோபயோடிக் மற்றும் ப்ரீபயாடிக் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். தயிர் மற்றும் கேபீர் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் நிறைந்து இருக்கின்றன. அதுபோல, பூண்டு, வெங்காயம், வாழைப்பழம் போன்ற உணவுகளிலும் நன்மை தரும் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏதுவான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இது போன்ற உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுங்கள். நிச்சயமாக நல்ல பலனை பெறுவீர்கள்.