அடிக்கடி தாகம் எடுக்குதா..? அப்ப இந்த 4 பிரச்சினைகள் தான் காரணம்.. உடனே சரி செய்ங்க..
தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், அது பல தீவிர நோய்களின் அறிகுறியாகும். எனவே, அதை சரியான நேரத்தில் சரிபாருங்கள்.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். காரணம், தண்ணீர் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதால், பல நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
இதுதவிர, உணவை ஜீரணிக்கவும், உடல் எடையை குறைக்கவும் தண்ணீர் உதவுகிறது. ஆனால் உங்களுக்கு தெரியுமா.. அடிக்கடி தண்ணீர் குடிப்பது சில தீவிர நோய்களுக்கு காரணமாக இருக்கலாம். எனவே, அதிக தாகத்தால் எந்தெந்த நோய்கள் வர வாய்ப்புள்ளது என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
சர்க்கரை நோய்: அடிக்கடி தாகம் எடுப்பது, உடலில் இரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, நம் உடலானது அதை சிறுநீர் மூலம் அகற்றுகிறது. இதனால் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, அடிக்கடி தாகம் எடுக்கிறது..
இரத்த சோகை: உடலில் ஹீமோகுளோபின் இல்லாததால் தான் இரத்த சோகை வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகமாகவே ஏற்படுகின்றது. தவறான உணவு (அ) அதிக இரத்தப்போக்கு என போன்ற பல காரணங்களால் இது நிகழும். இதனால் உங்களுக்கு தாகம் அதிகரிக்கும். இவை தலைச்சுற்றல், சோர்வு, வியர்வை மற்றும் பிற அறிகுறிகளையும் உள்ளடக்கி உள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்! நின்று கொண்டு தண்ணீர் குடிச்சா 'இந்த' மாதிரி பிரச்சினைகள் வரும்.. ஜாக்கிரதை!
அடிக்கடி வாய் வறண்டு போவது: வறண்ட வாய் காரணமாகவும், மீண்டும் மீண்டும் தாகம் எடுக்கும். இதற்கு அதிகப்படியான புகைபிடித்தல், அதிக அளவில் மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்றவற்றாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, வறண்ட வாய் வாய் துர்நாற்றம், சுவையில் மாற்றம், ஈறுகளில் எரிதல் மற்றும் உணவை மெல்லுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: தினமும் 8 கிளாஸுக்கு மேல் தண்ணீர் குடிச்சா ஆரோக்கியத்திற்கு ஆபத்தா..? ஆய்வுகள் சொல்வது என்ன..?
கர்ப்ப காலத்தில்: கர்ப்பத்தின் காரணமாக கூட தாகம் எடுக்க பிரச்சனையும் ஏற்படும். எப்படியெனில், முதல் மூன்று மாதங்களில், இரத்த அளவு அதிகரிக்கிறது. இதனால் சிறுநீரகங்களில் அதிகப்படியான திரவம் உருவாகிறது, இதன் காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்கப்படுகிறது. இது தவிர, உடலில் நீர்ச்சத்து இல்லாததாலும், அதிக தாகம் எடுக்க வாய்ப்பு உள்ளது..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D