காலையில் தவறுதலாக கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. ஆரோக்கியத்திற்கு கேடு!
காலையில் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மிகவும் அவசியம். ஆனால், காலையில் தவறுதலாக கூட சாப்பிட கூடாத சில உணவுகளை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் இருக்க காலை ஆரோக்கியமான உணவோடு தொடங்குவது மிகவும் முக்கியம். காலை உணவு உங்கள் முழு நாளையும் மாற்றும். இருப்பினும் நீங்கள் காலையில் ஏதாவது தவறாக சாப்பிட்டால் அது உங்கள் முழு நாளையும் கெடுத்துவிடும் மற்றும் உங்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நாளை எதை சாப்பிடுவதன் மூலம் தொடங்க வேண்டும் , எதை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி சரியான தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம். காலை உணவைத் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் அடிக்கடி குழப்பம் அடைகிறீர்கள் என்றால், தவறுதலாக கூட காலையில் சாப்பிடக்கூடாத சில உணவுகளை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
தயிர்: ஊட்டச்சத்து நிறைந்த தயிர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும், இதை சாப்பிட்டு உங்கள் நாளை தொடங்கவே கூடாது. உண்மையில், நீங்கள் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடும் போது உங்கள் வயிற்று அமிலம், நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து அவற்றை பயனற்றதாக ஆக்குகிறது.
பொறித்த உணவுகள்: நீங்கள் காலை உணவில் எண்ணெயில் பொரித்த உணவுகள் எதையும் சாப்பிட வேண்டாம் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு ஆரோக்கியமற்ற காலை உணவாக இருக்கும். உதாரணமாக பொரித்த முட்டை, உருளைக்கிழங்கு போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
சிட்ரஸ் பழங்கள்: காலையில் புளிப்பான பழங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவு அமிலம் மற்றும் புளிப்பு உள்ளது. இது தவிர, காலையில் காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதிக சர்க்கரை உணவுகள்: காலை உணவில் சர்க்கரை உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை அதிகளவில் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பிரக்டோஸின் அளவை அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: தினமும் காலை சோர்வாக உணர்கிறீர்களா..? புத்துணர்ச்சியுடன் நாளை தொடங்க சூப்பரான டிப்ஸ்..!
டீ காபி: பலர் ஒரு கப் டீ அல்லது காபியுடன் தங்கை நாளை தொடங்குகிறார்கள். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடித்தால் உடலில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அமிலத்தன்மை இரைப்பை அலர்ஜி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: உடல் எடையை கஷ்டப்படாமல் குறைக்கணுமா..? அப்ப தினமும் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ங்க..
வெள்ளை ரொட்டி: பெரும்பாலும் பலர் காலை உணவாக வெள்ள ரொட்டியுடன் ஜாம் அல்லது வெண்ணெயுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள். இருப்பினும், உங்கள் நாளை வெள்ள ரோட்டி உடன் தொடங்கினால், அது தவறு. உண்மையில் வெள்ளை ரொட்டியில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லை. எனவே, அதை சாப்பிடுவது உடன நிறுத்துங்கள்.
டோனட்: நீங்கள் அதிகாலையில் டோனட் சாப்பிட்டால், உடனே இந்த பழக்கத்தை மாற்றுங்கள். உண்மையில், டோனட்டில் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளது. இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை கடுமையாக அதிகரிக்கச் செய்யும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D