அத்திபழத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா! இரத்த சர்க்கரை அளவு முதல் ஆண்மை குறைபாடுகள் வரை!
அத்திப்பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. இதில் நார்ச்சத்து, துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
Fig Fruit
அத்திப்பழம் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். அத்திப்பழம் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும் வயிற்று புண் உள்ளிடட்டவைகளை குணப்படுத்த உதவுகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்து, துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
Fig Fruit
மாதவிடாய் கோளாறு நீங்கும்
பெண்கள் தினமும் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.
Blood Pressure
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
அத்திப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. எனவே, தினமும் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுங்கள்.
Fig Fruit
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. இது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடியது. இது தவிர, இதிலிருக்கும் குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.
Fig Fruit
எடையை குறைக்க உதவும்:
அத்திப்பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் உதவியுடன் உங்களது வளர்ச்சிதை மாற்றம் சரியானதாக மாற்றலாம். அதுமட்டுமின்றி, இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி வைத்திருக்கும். மேலும் இந்த பழம் கலோரி அளவை கட்டுப்படுத்தும். எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் ஊற வைத்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிடுங்கள்.
Fig Fruit
கருவுறுதலை அதிகரிக்கும்
இந்த பழத்தில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் பலவீனமாக இருக்கும் போது கூட அத்திப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
Bones
எலும்புகளுக்கு ஆரோக்கியம்
கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியன் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இந்த பழத்தில் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் எலும்புகள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. மேலும், இது எலும்புகளை வலுவாக்கும்.
Heart
இதயத்திற்கு ஆரோக்கியம்
அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இது தவிர, இந்த பழம் உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் குறைக்கும்.