- Home
- Gallery
- Ramya Krishnan : நடிகை ரம்யா கிருஷ்ணனின் திருமண போட்டோவை பார்த்திருக்கீங்களா? அன்சீன் போட்டோ வைரல்..
Ramya Krishnan : நடிகை ரம்யா கிருஷ்ணனின் திருமண போட்டோவை பார்த்திருக்கீங்களா? அன்சீன் போட்டோ வைரல்..
நடிகை ரம்யா கிருஷ்ணனின் திருமண போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். மோசமான நெகட்டிவ் கேரக்டராக இருந்தாலும் சரி, தாயாக இருந்தாலும் சரி, எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது அசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
படையப்பா என்றால் ரஜினிக்கு அடுத்து நீலாம்பரி கேரக்டர் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அதே போல் மற்றும் பாகுபலியில் ராஜமாதாவாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளாக சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ என பிசியான நடிகையாக வலம் வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.
கடந்த 2019-ம் ஆண்டு குயின் வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் தளத்திலும் எண்ட்ரி கொடுத்தார் ரம்யா கிருஷ்ணன். தமிழில் கடைசியாக ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
தெலுங்கில் கடைசியாக குண்டூர்காரம் படத்தில் நடித்திருந்தார். ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ.98 கோடி என்று கூறப்படுகிறது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் 2003-ம் ஆண்டு தெலுங்கு இயக்குனர் வம்சியை திருமணம் கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.
கடந்த 12-ம் தேதி ரம்யா கிருஷ்ணன் - வம்சி தம்பதி தங்கள் திருமண நாளை கொண்டாடினர். இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் திருமண போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.