சரிந்ததா காய்கறிகளின் விலை.! கோயம்பேட்டில் தக்காளி, பீன்ஸ், பீட்ரூட் விலை என்ன தெரியுமா.?
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை என்ன என்பதை அறியலாம். நெல்லிக்காய், வாழைப்பூ, குடைமிளகாய், பாகற்காய், சுரைக்காய், அவரைக்காய், முட்டைக்கோஸ், கேரட், இஞ்சி, மாங்காய், வெண்டைக்காய், பூசணி, முள்ளங்கி, பீர்க்கங்காய், புடலங்காய் போன்றவற்றின் விலை விபரங்கள் இங்கே.
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும். சின்ன வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாகற்காய் விலை என்ன.?
நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 90 ரூபாய் விற்பனை ஆகிறது.
கத்திரிக்காய் விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒன்று 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 25 ரூபாய்க்கும், பீன்ஸ் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
School Colleges Holiday: ஹேப்பி நியூஸ்! நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு!
வெண்டைக்காய் விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 45க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.