MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கடும் போட்டிக்கு மத்தியில் விற்பனையான பார்க்கிங் பட ரீமேக் உரிமை... ஒரே நேரத்தில் 5 மொழிகளில் ரீமேக் ஆகிறது

கடும் போட்டிக்கு மத்தியில் விற்பனையான பார்க்கிங் பட ரீமேக் உரிமை... ஒரே நேரத்தில் 5 மொழிகளில் ரீமேக் ஆகிறது

ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த பார்க்கிங் திரைப்படம் 5 மொழிகளில் ரீமேக் ஆக உள்ளதாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 21 2024, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
parking Movie

parking Movie

தமிழ் சினிமாவில் கடந்தாண்டு நிறைய சிறு பட்ஜெட் படங்கள் பெரியளவில் கொண்டாடப்பட்டன. அந்த லிஸ்ட்டில் இடம்பெற்ற ஒரு படம் தான் பார்க்கிங். ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்த இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
parking Movie Harish kalyan

parking Movie Harish kalyan

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்துக்கு போட்டியாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. கதையை பொறுத்தவரை மிகவும் சிம்பிள் ஆனது தான். இரண்டு வீடுகள் கொண்ட அபார்ட்மெண்ட்டில் ஒரே காரை பார்க்கிங் செய்யும் வசதி இருக்கும், அதில் யார் காரை நிறுத்துவது என இருவருக்கும் இடையேயான ஈகோ மோதல் தான் இப்படத்தின் கதைக்களம்.

இதையும் படியுங்கள்... நினைத்தேன் வந்தாய் சீரியல் : குடிபோதையில் எழில்... யாருக்கும் தெரியாமல் இந்துவின் சமாதிக்கு சென்ற குழந்தைகள்

34
Harish Kalyan

Harish Kalyan

சிம்பிளான கதையாக இருந்தாலும் அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் காட்சிப்படுத்திய விதம் தான் இப்படத்தை ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆக்கியது. திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த இப்படம், ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னர் உலகம் முழுவதிலும் இருந்து இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது. தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு இப்படம் ரிலீஸ் ஆனதால் இதற்கு மற்ற மொழிகளிலும் வரவேற்பு கிடைத்தது.

44
parking Movie Remake in 5 languages

parking Movie Remake in 5 languages

இந்த நிலையில், தற்போது அப்படம் மேலும் ஒரு சாதனையை படைத்து இருக்கிறது. அதன்படி பார்க்கிங் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஒரு சர்வதேச மொழியில் இப்படத்தை ரீமேக் செய்வதற்கான உரிமை பெரும் தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாம். ஒரே நேரத்தில் 5 மொழிகளில் பார்க்கிங் படம் ரீமேக் செய்ய உள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்...புர்ஜ் கலிஃபாவில் சொந்த அபார்ட்மெண்ட்... கோடிகளில் புரளும் மோகன்லால் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved