பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட உற்சாகமாக இருக்கிறேன் – ஹர்திக் பாண்டியா!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட உற்சாகமாக இருப்பதாக இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

T20 World Cup 2024
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஓமன், கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நேபாள், நெதர்லாந்து உள்பட 20 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
IND vs PAK, T20 World Cup 2024
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா என்று 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதுவரையில் அமெரிக்கா விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
T20 World Cup 2024
இந்தியா விளையாடிய போட்டியில் வெற்றி பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. வரும், 9 ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு எளிதில் முன்னேறும். பாகிஸ்தான் தோல்வி அடைந்தால் சிக்கல் ஏற்படும்.
T20 World Cup 2024
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னைப் பொறுத்த வரையில் முக்கியமான போட்டிகளில் நின்று விளையாடுவது மிகவும் உற்சாகமாக இருக்கும்.
Hardik Pandya
பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியுடன் விளையாட ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். பல போட்டிகளில் சிறப்பாக செயல்பட முடிந்தது என்று கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாடிய பாண்டியா 84 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்துள்ளார்.