ஒரே ஒரு போட்டி – வரலாற்றில் இடம் பிடித்த ஹர்திக் பாண்டியா: அது என்ன தெரியுமா?
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியில் 6ஆவது வீரராக களமிறங்கி அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார்.

T20 World Cup 2024, IND vs BAN
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று போட்டி தற்போது ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
T20 World Cup 2024, IND vs BAN
இதில், அதிரடியாக ஆரம்பித்த ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழக்கவே, விராட் கோலியும் அதிரடியாக விளையாடி 37 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 6 ரன்னிலும், ரிஷப் பண்ட் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 34 ரன்களில் நடையை கட்டினார். கடைசி வரை அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
T20 World Cup 2024, IND vs BAN
இதன் மூலமாக நம்பர் 6ல் களமிறங்கி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
T20 World Cup 2024, IND vs BAN
அதுமட்டுமின்றி, இந்தப் போட்டியில் இந்திய அணி 196 ரன்கள் எடுத்ததன் மூலமாக டி20 உலகக் கோப்பை தொடரில் 3ஆவது முறையாக அதிகபட்ச ரன்கள் எடுத்துள்ளது. மேலும், இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் 13 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.
T20 World Cup 2024, IND vs BAN
இதற்கு முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 11 சிக்ஸர்கள் மட்டுமே இந்திய அணி அடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.