School Colleges Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ஆகஸ்ட் 6ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரத் திருவிழாவை ஒட்டி ஆகஸ்ட் 6ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Melmaruvathur Adhiparasakthi
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம். இக்கோவிலுக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். இந்நிலையில் ஆடிப்பூரத் திருவிழா என்பது மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் மிகவும் விசேஷமானது. இந்த ஆடிப்பூரத் திருவிழா ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Holiday: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வரும் திங்கட்கிழமை விடுமுறை! வெளியான அறிவிப்பு!
School Holiday
இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் வருகின்ற ஆகஸ்ட் 6ம் தேதி ஆடிப்பூரத் திருவிழா நடைபெறுவதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: School Student : இனி அரசு பள்ளிகள் காலை 9.15க்கு தொடங்கும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
School Working Day
ஆனாலும் அரசு கருவூலகங்கள், முக்கிய அலுவலகங்கள் ஆகியவை குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கும். இந்த விடுமுறையானது வங்கிகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 31ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.