ஐயோ! கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் என்ன விட்டுட்டு போயிட்டியே மாமா! திருமணமான 2வது நாளில் மணமகன் தற்கொலை!
செங்கல்பட்டு அருகே திருமணமான 2வது நாளில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
marrige 001
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்துள்ள கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (27). இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற சுவேதா (21) என்பவருடன் கடந்த 17ம் தேதி தடபுடலாக திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு 2 நாட்கள் கழித்து மணமக்கள் திம்மாவரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு கடந்த 19-ம் தேதி முதலிரவு நடைபெற்றது. மறுநாள் அதிகாலையில் சுவேதா கண்விழித்து பார்த்தபோது சரவணன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்ட படியே அறை கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவந்து வீட்டில் உள்ளவர்களிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
உடனே அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு புதுமாப்பிள்ளை சரவணன் சுவேதாவின் முகூர்த்த புடவையில் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து உடனே போலீசாருக்கும், சரவணனின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2வது நாளில் மணமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.