கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் திருப்பதி மலையேறிய புது மாப்பிள்ளை உயிரிழப்பு! கதறும் மனைவி!
திருமணமான 15 நாட்களுக்குப் பிறகு, திருப்பதிக்குச் சென்றிருந்த புதுமாப்பிள்ளை ஒருவர் நடைபாதையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Heart Attack
கொரோனாவுக்குப் பிறகு மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், புது மாப்பிள்ளை நேரத்திக்கடன் நிறைவேற்ற நடைபாதை வழியாக சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
New Marriage Couple
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர் நரேஷ் இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் ஸ்வாதி என்ற பெண்ணுடன் தடபுடலாக திருமணம் நடைபெற்றது.
இதையும் படிங்க: School College Holiday: ஆகஸ்ட் 28ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியாக போகும் அறிவிப்பு!
Tirumala Tirupati Devasthanam
இந்நிலையில் பெற்றோரின் வேண்டுதலை நிறைவேற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நரேஷ் தனது குடும்பத்தினருடன் நேற்று திருப்பதி சென்றுள்ளார். அலிபிரி நடைபாதை வழியாக நரேஷ் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது 2,350வது படியில் காலை வைக்கும் போது திடீரென மயங்கினார். இதனால் அதிர்ச்சியில் அலறிய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் நரேஷை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
New Groom Heart Attack
திருமணம் முடிந்த 15 நாளில் புதுமாப்பிள்ளை திருப்பதி கோயிலுக்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் உடலை பார்த்து மனைவி கதறி அழும் காட்சிகள் பொதுமக்கள் கண்களில் இருந்து கண்ணீர் வரவைழத்தது.