- Home
- Gallery
- Tasmac : தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! எப்போ தெரியுமா.? வெளியான முக்கிய அறிவிப்பு
Tasmac : தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! எப்போ தெரியுமா.? வெளியான முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீறி மதுக்கடைகள், பார்கள் திறந்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

tasmac
நிதியை அள்ளி கொடுக்கும் அட்ஷயபாத்திரம்
தமிழக அரசின் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல்படுதப்படுகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை, தமிழ் புதல்வன், புதுமைப்பெண் என திட்டங்களுக்கு மாதம் பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இது போன்ற திட்டங்களுக்கு அதிகளவு வருவாய் ஈட்டி உதவி செய்வது பத்திரப்பதிவு மற்றும் டாஸ்மாக் ஆகும். அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் 45 ஆயிரத்து 855 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டப்படுள்ளது.
TASMAC
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தமிழகத்தை பொறுத்தவரை 4ஆயிரம் மதுபான கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்க 100 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் கொடுத்து வருகிறது. விஷேச நாட்களில் ஒரு நாள் வருவாய் 130 முதல் 200 கோடி வரை கிடைக்கிறது. இந்தநிலையில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
ரூ.1,734 கோடிப்பே.. சினிமாவை மிஞ்சிய குடிமகன்கள்.. கடந்த ஆண்டை விட அதிகரித்த டாஸ்மாக் வருமானம்..
tasmac price hike
உத்தரவை மீறினால் நடவடிக்கை
இந்தநிலையில் மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் நாளை மறுதினம் அதாவது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன்இணைந்த பார்கள் மற்றும் ஹோட்டல்களுடன் இணைந்த தனியார் பார்கள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது