அரசு சொகுசு பேருந்தும் - தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்.. பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு..!
வாணியம்பாடி அருகே அரசு சொகுசு பேருந்தும் - தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவற்றை உடைத்துக்கொண்டு சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது நேருக்கு மோதியது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வலியால் துடித்துக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வெளியாகி உள்ளது. சென்னையை சேர்ந்த கிருத்திகா (35), வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்த முகமது பைரோஸ் (45), சித்தூரை சேர்ந்த அஜீத் (25), மற்றும் SETC அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.