School Colleges Leave : நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு.! ஏன் தெரியுமா.?
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்கள், மசூதி மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் விழாக்களையொட்டி அந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை விடப்படும் அந்த வகையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரத் திருவிழாவை ஒட்டி நாளை (ஆகஸ்ட் 6ம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
School Student
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கும் அந்த வகையில் இந்தாண்டு பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என முக்கிய பண்டிகை தினங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை தவிர்த்து உள்ளூரில் நடைபெறும் திருவிழாவையொட்டி அந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். இதனை மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார் அந்த வகையில் நாளைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
MK Stalin : ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா செல்லும் ஸ்டாலின்.! யாரையெல்லாம் சந்திக்கிறார் தெரியுமா.?
melmaruvathur adhiparasakthi
ஆடிப்பூரத் திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. இந்த ஆதிபராசக்தி அம்மா கோயிலுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வருவார்கள். அங்கு நடைபெறும் சிறப்பு பூஜையிலும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரத் திருவிழா என்பது மிகவும் விசேஷமானது. இந்த ஆடிப்பூரத் திருவிழா நாளைய((ஆகஸ்ட் 6) தினம் நடைபெறவுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை
இதனால் அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதாலும் செங்கல்பட்டு மாவட்டம் கொண்டாடமாக இருப்பதாலும் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில்(ஆகஸ்ட் 6ம் தேதி ) நாளைய தினம் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறுவதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்படுவதாக கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலைநாள்
இருந்த போதிலும் முக்கிய அரசு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 31ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.