சொன்னா எங்க கேக்குறீங்களா.. சென்னையில் அரசு பேருந்தில் தவறி விழுந்த பள்ளி மாணவனின் இரண்டு கால்கள் துண்டானது.!
சென்னை குன்றத்தூரில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி கீழே விழுந்ததில் அவரது இரண்டு கால்களும் துண்டாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டு மற்றும் பேருந்தின் மேற்பகுதியில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் படிக்கட்டில் தொங்கிய படி செல்வதையே பொழப்பாக வைத்துள்ளனர். இதுபோன்ற பயணத்தின் போது விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் வாடிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னை குன்றத்தூரில் படிக்கட்டில் பயணம் செய்த போது விபத்தில் சிக்கிய பள்ளி மாணவனின் இரண்டு கால்கள் துண்டாகி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குன்றத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சந்தோஷ். இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சந்தோஷ் சக மாணவர்களுடன் அரசு பேருந்தில் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த எதிர்பாராத தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது பேருந்தில் பின்பக்க சக்கரம் சந்தோஷின் இருகால்கள் மீது ஏறி இறங்கியதால் கால்கள் நசுங்கின. இதனால் பள்ளி மாணவன் வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார்.
உடனே இந்த விபத்து தொடர்பாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாணவனுக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 2 கால்களும் அகற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.