School Students: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன அரசு தேர்வுகள் இயக்ககம்!
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

School Student
உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான திறனாய்வு தேர்வு ஜூலை மாதம் 21ம் தேதி நடக்க இருப்பதை அடுத்து, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஜூன் 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
School Student
இதுதொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ஜூலை மாதம் 21ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு முதலமைச்சரின்திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 21.06.2024 பிற்பகல் முதல் 26.06.2024 வரை பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது.
School Student
தற்போது இக்கால அவகாசம் ஜூலை 3ம் வரை நீட்டிக்கப்படுகிறது. என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்கள் விண்ணப்பித்திட தலைமையாசிரியர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.