- Home
- Gallery
- ஆதிக்கிற்கு டாடா காட்டிவிட்டு கிளம்பிய அஜித்... பாதியில் நிறுத்தப்பட்ட குட் பேட் அக்லி ஷூட்டிங் - காரணம் என்ன?
ஆதிக்கிற்கு டாடா காட்டிவிட்டு கிளம்பிய அஜித்... பாதியில் நிறுத்தப்பட்ட குட் பேட் அக்லி ஷூட்டிங் - காரணம் என்ன?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வந்த குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதற்கான காரணம் வெளியாகி உள்ளது.

Vidaamuyarchi
அஜித் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், நடிகை ரெஜினா கசெண்ட்ரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டும் எஞ்சி உள்ளது.
good bad ugly rights
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஆனதால், குட் பேட் அக்லி படத்தில் நடித்து வந்தார் அஜித். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரீ மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிகர் அஜித்துடன் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளாராம். இப்படத்தில் நடிகர் அஜித் மூன்று வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் அப்டேட்டும் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ஒரு வாரம் ஆகியும் ஓயாத கூட்டம்.. சூரியின் கருடன் படத்தால் கப்சிப்னு ஆன மோகனின் ஹரா - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Ajith, kalyan master
அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் அப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வந்தது. சுமார் ஒரு மாத காலம் நடைபெற்ற ஷூட்டிங்கில் அஜித் நடித்த பாடல் காட்சியும் படமாக்கப்பட்டதாம். அப்பாடல் காட்சிக்கு கல்யாண் மாஸ்டர் தான் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
aadhik, ajith
குட் பேட் அக்லி படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்ததும் படக்குழுவினருக்கு டாடா காட்டிவிட்டு கிளம்பிய அஜித், நேராக அஜர்பைஜானுக்கு பறக்க உள்ளாராம். அங்கு விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளாராம் அஜித். அங்கு சுமார் 40 நட்கள் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற உள்ளதாம். அது முடிந்த பின்னர் குட் பேட் அக்லி படத்தின் அடுத்தடுத்தகட்ட படப்பிடிப்புகள் ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... 40 வயதுக்கு மேலாகியும் திருமணமாகல... பாகுபலி நடிகருடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகையா இது? ஆனா திரிஷா இல்ல