- Home
- Gallery
- அப்பாவுடனான பிரச்சனைக்கு எண்டு கார்டு போட்ட தளபதி.! புதிய அலுவலகத்தில் பெற்றோருடன் விஜய்.. வைரலாகும் போட்டோ!
அப்பாவுடனான பிரச்சனைக்கு எண்டு கார்டு போட்ட தளபதி.! புதிய அலுவலகத்தில் பெற்றோருடன் விஜய்.. வைரலாகும் போட்டோ!
தளபதி விஜய் தன்னுடைய அம்மா - அப்பாவுடன் எடுத்து கொண்ட புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தளபதி விஜய் தன்னுடைய அப்பா ஒரு இயக்குனர் என்பதால், ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு மிக எளிதில் கிடைத்து விட்டாலும், தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க 10 வருடங்களுக்கு மேல் ஆனது. அதே போல் ரசிகர்கள் மனதில் இடம்பிக்க 20 வருடங்கள் ஆனாது. விஜய் அன்று கடந்து வந்த கரடு முரடான பாதைகள் தான் அவரை தற்போது யாராலும் எட்ட முடியாத உயரமான சிம்மாசனத்தில் அமர வைத்துள்ளது.
தற்போது தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கும் நிலையில், மகன் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்திரி நடிக்கிறார். இவர்களை தவிர பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல், லைலா, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.
Vijay
படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே... படக்குழு புரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த படத்தை முடித்த கையேடு, விஜய் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இதற்க்கு இடையில் தன்னுடைய அரசியல் பணியிலும் ஆர்வம் காட்டிவரும் விஜய், அடுத்த மாதம் இந்த ஆண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுக்க உள்ளார்.
இதற்கான பணிகள், ஒருபுறம் பரபரப்பாக நடந்து வருகிறது. அதே போல் விஜய் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே துவங்க உள்ளதாகவும் அதற்குள் தன்னுடைய அணைத்து பட பணிகளையும் முடித்து கொடுத்துவிட்டு, ஒரேயடியாக சினிமாவுக்கு குட் பை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுஒரு புறம் இருக்க, ஒரு சிலர் தளபதி விஜய் தன்னுடைய அப்பாவிடம் பேசவே மாட்டார். அவர்கள் இருவரும் இனி சந்தித்து கொள்வது மிகவும் கடினம் தான் என பக்கம் பக்கமாக கதைக்காட்டிய நிலையில், இதுபோன்ற விமர்சனங்களை சுக்குநூறாக உடைக்கும் விதத்தில், தற்போது தளபதி விஜய் தன்னுடைய அம்மா ஷோபா மற்றும் அப்பா எஸ்.வி.சந்திரசேகருடன் தன்னுடைய புதிய அலுவலகத்தில் இருந்து எடுத்து கொண்ட புகைப்படம் தீயாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தில் அப்பா, அம்மா தோள் மீது விஜய் கை போட்டு கொண்டு, கோட் பட லுக்கில் காணப்படுகிறார். அப்பாவுடனான வதந்திக்கு தளபதி முற்றுப்புள்ளி வைத்தது போல், மனைவி சங்கீதா உடனான கருத்து வேறுபாடு வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.