பிரபல ஹோட்டலில் வாங்கிய பெப்பர் சிக்கனில் கண்ணாடி துகள்கள்! வாடிக்கையாளர் வாயை பதம் பார்த்ததால் கதறல்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரபல பிரியாணி ஹோட்டலில் வாங்கிய சிக்கனில் உடைந்த கண்ணாடி துண்டுகள் வாடிக்கையாளர் வாயை கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
aasife biriyani
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை சாலையில் பிரபலமான ஆசிப் பிரியாணி ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் முகமது பாரித் என்பவர் பெப்பர் பார்பிக்யூ சிக்கனை வீட்டுக்கு பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று சிக்கனை சாப்பிட்ட போது, வாயில் இருந்து திடீரென ரத்தம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிக்கன் உள்ளே பார்த்தபோது, உடைந்த கண்ணாடி துண்டுகள் ஏராளமாக கிடந்துள்ளது.
இதையும் படிங்க: School Holiday: குட்நியூஸ்! ஆகஸ்ட் 24, 25, 26 ஆகிய 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!
aasife biriyani
இதுதொடர்பாக முகமது பாரித் ஹோட்டலுக்கு சென்று ஊழியர்களிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தண்ணீர் இருந்த கண்ணாடி பாட்டில் சமையலறையில் விழுந்து உடைந்து விட்டதாகவும், இதில் உடைந்த கண்ணாடி துண்டுகள் மசாலா பாத்திரத்திற்குள் விழுந்ததை பார்க்காமல், அப்படியே சிக்கனில் தடவி பொரித்து விற்பனை செய்துள்ளது தெரிய வந்தது.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: அட கடவுளே! இன்னைக்குனு பார்த்து முக்கிய இடங்களில் எல்லாம் மின்தடை?
இது குறித்து முகமது பாரித் உணவுப் பாதுகாப்புத் துறையில் புகார் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டர். அப்போது கெட்டுப்போன 6 கிலோ சிக்கன் மற்றும் 50 அழுகிய முட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.