நீயே என்ன விட்டு போயிட்ட! நான் இருந்து என்ன பண்ண போறேன்! காதலிக்காக உயிரை விட்ட காதலன்! நடந்தது என்ன?
காதலி உயிரிழந்த நாளிலிருந்து வேதனையில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Love Couple
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்துள்ள பெரியாண்டப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் சஞ்சீவி (23). இவர் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் அடிக்கடி இருவரும் வெளியே சென்று காதலை வளர்த்து வந்தனர்.
Girlfriend death
இந்நிலையில் இவர் காதலித்த பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டதில் இருந்து சரியான சாப்பிடாமல் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: 17 வயது சிறுவனுடன் எஸ்கேப்பாக நினைத்த 8ம் வகுப்பு மாணவி! ரூமில் வசமாக சிக்கினார்! மருத்துவ பரிசோதனையில் பகீர்!
Lover Suicide
இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனமுடைந்த சஞ்சீவி தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகன் தூக்கில் சடலமாக தொங்கிய பார்த்து அதிர்ச்சியில் அழுது கதறி கூச்சலிட்டனர்.
இதையும் படிங்க: Spritual Tour for Vaishnava Temples: வைணவ கோயில்களுக்கு ஒருநாள் இலவச ஆன்மிக பயணம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!
Police investigation
இந்த சம்பவம் தொடர்பாக மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சஞ்சீவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆசை ஆசையாக காதலித்த காதலி உயிரிழந்ததால் வேதனையின் காதலனும் தற்கொலை செய்து கொண்டார்.