MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Coolie Movie Update : ரஜினியின் கூலி படத்துக்காக மீண்டும் மச்சி உடன் கூட்டணி... லோகேஷ் கனகராஜ் செம்ம ஹாப்பி

Coolie Movie Update : ரஜினியின் கூலி படத்துக்காக மீண்டும் மச்சி உடன் கூட்டணி... லோகேஷ் கனகராஜ் செம்ம ஹாப்பி

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள கூலி திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் நண்பர் இணைந்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 03 2024, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
coolie Rajinikanth

coolie Rajinikanth

நடிகர் ரஜினிகாந்துக்கு தற்போது 72 வயது ஆனாலும், இந்த வயதிலும் செம்ம பிசியான நடிகராக வலம் வருகிறார். அவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினி உடன் பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அமிதாப் பச்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
coolie Movie Update

coolie Movie Update

வேட்டையன் படத்தை தொடர்ந்து கூலி, ஜெயிலர் 2 என இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ரஜினி. இதில் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜும், ஜெயிலர் 2 படத்தை நெல்சனும் இயக்க உள்ளனர். இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இப்படங்களுக்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளார். இந்த படங்களின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... தென்னிந்தியாவில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்த படங்கள்.. ரஜினி, பிரபாஸ் இருக்காங்க.. விஜய் இல்லையா!

34
lokesh kanagaraj, rajinikanth

lokesh kanagaraj, rajinikanth

தற்போது கூலி படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ரஜினி. இப்படத்தில் ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் தொடங்க உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக கூலி உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாம். இப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளது.

44
Girish Gangadharan, lokesh kanagaraj

Girish Gangadharan, lokesh kanagaraj

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக கூலி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக கிரீஷ் கங்காதரன் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். அப்படத்திற்கு பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும். கிரீஷ் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவருடன் இணைவதை உறுதி செய்துள்ளார் லோகி.

இதையும் படியுங்கள்... போட்டோ முதல் செக் வரை மேடையில் விஜய் கொடுக்கும் பரிசுத் தொகுப்பில் என்னென்ன இருக்கிறது? வீடியோ இதோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கூலி (ரஜினிகாந்த் திரைப்படம்)
லோகேஷ் கனகராஜ்
ரஜினிகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved