ஒரே நாளில் ரூ.1.80 லட்சம் கோடியை இழந்த கௌதம் அதானி.. அப்ப முகேஷ் அம்பானி?
இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்த நிலையில் இந்திய தொழிலதிபர்களான கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் சொத்து மதிப்பு கணிசமாக குறைந்தது.

தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கு மாறாக, பாஜக பெரும்பான்மையைப் பெறத் தவறியதை அடுத்து, தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று பங்குச்சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை கண்டது. இதனால் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன.
adani
குறிப்பாக அதானி குழுமத்தில் உள்ள 10 நிறுவனங்களின் பங்குகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. நேற்று ஒரே நாலில் அதானி குழுமத்தின் பங்குகள் 18% வரை சரிந்ததால் பின்னடைவைச் சந்தித்தது. இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.64 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்தது.
இதனால் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு ஒரு நாளில் 21.9 பில்லியன் டாலர்கள் சரிவைக் கண்டது. இந்திய ரூபாயில் 1.80 லட்சம் கோடி ரூபாய் சரிந்து ரூ.6.30 லட்சம் கோடியாக உள்ளது.
கௌதம் அதானி தற்போது ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் 21வது இடத்தில் உள்ளார். முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.
mukesh ambani reliance industries
அதே போல் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் சரிவைக் கண்டது. நேற்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் 7.5% சரிவை கண்டன. இதனால்
இதனால் ரிலையன்ஸ் நிறுவன சந்தை மதிப்பு ரூ.1.54 லட்சம் கோடி வீழ்ச்சியை கண்டது. மேலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.66,400 கோடி சரிந்து ரூ.9.13 லட்சம் கோடியாக உள்ளது. ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தற்போது 11வது இடத்தில் இருக்கிறார்.
ஃபோர்ப்ஸின் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் 208 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பெர்னார்ட் அர்னால்ட் 204 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2-வது இடத்தில் இருக்கிறார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 197பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 167.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்திலும், கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ் 149.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.