- Home
- Gallery
- கருடன் முதல் உப்பு புளி காரம் வரை... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா? முழு லிஸ்ட் இதோ
கருடன் முதல் உப்பு புளி காரம் வரை... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா? முழு லிஸ்ட் இதோ
சூரி, சசிகுமார் நடித்த கருடன், கவுதம் மேனன் நடித்த ஹிட் லிஸ்ட் உள்பட இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

Garudan
கருடன்
சூரி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கருடன். இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் சூரி உடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ரோஷினி, பிரிகிடா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வருகிற மே 31-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
hit list
ஹிட்லிஸ்ட்
இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ஹிட்லிஸ்ட். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து உள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்தை சூர்யகதிர் காக்கள்ளர், கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இப்படமும் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... Vanangaan : இந்தியன் 2-வுக்கு போட்டியாக வணங்கான்... ஷங்கருக்கு ஷாக் கொடுக்க தயாராகிறாரா பாலா?
Akaali
அக்காலி
முகமது ஆசிஃப் ஹமீது இயக்கியுள்ள திரைப்படம் அக்காலி. இப்படத்தில் தலைவாசல் விஜய், நாசர், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இது வருகிற மே 31-ந் தேதி திரைகாண உள்ளது.
Mr and Mrs Mahi
மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி
ஷரன் ஷர்மா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி. இப்படத்தில் ஜான்வி கபூர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஜ்குமார் ராவ் நடித்துள்ள இப்படம் வருகிற மே 31-ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார் ஜான்வி கபூர்.
uppu puli kaaram
உப்பு புளி காரம்
ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் தொடர் தான் உப்பு புளி காரம். இதில் வனிதா, பொன்வண்ணன், ஆயிஷா, அஷ்வினி, நவீன், தீபிகா, ஃபரீனா, தீபக் ரமேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த வெப் தொடருக்கு ஷேக் இசையமைத்து உள்ளார். இந்த வெப் தொடர் வருகிற மே 30-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... வடிவேலு காமெடிக்கு இவ்வளவு பவரா... கோமாவில் இருந்து மீண்ட சிறுமி; தற்கொலை முடிவை கைவிட்ட பெண்! ஆச்சர்ய தகவல்