- Home
- Gallery
- கருடன் பட இயக்குனருடன் கூட்டணி... அடுத்த படத்துக்காக ஆளே டோட்டலாக மாறிய லெஜண்ட் சரவணன் - நியூலுக் போட்டோஸ் இதோ
கருடன் பட இயக்குனருடன் கூட்டணி... அடுத்த படத்துக்காக ஆளே டோட்டலாக மாறிய லெஜண்ட் சரவணன் - நியூலுக் போட்டோஸ் இதோ
கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

Legend saravanan
இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் துரை செந்தில்குமார். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனுஷ் தயாரித்த அப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. எதிர்நீச்சல் வெற்றிக்கு பின், மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து காக்கிசட்டை என்கிற திரைப்படத்தை இயக்கினார் துரை செந்தில்குமார். அப்படத்தில் போலீசாக நடித்திருந்தார் எஸ்.கே.
Legend saravanan next movie
பின்னர் தனுஷ் அரசியல்வாதியாக நடித்த கொடி மற்றும் டபுள் ஆக்ஷனில் மிரட்டிய பட்டாஸ் ஆகிய படங்களையும் இயக்கினார் துரை செந்தில்குமார். இந்த படங்கள் பெரியளவில் வெற்றியடையாததால், மீண்டும் விடுதலை படத்தில் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய துரை செந்தில்குமாருக்கு அப்போது சூரியுடன் ஏற்பட்ட பழக்கத்தால், அவரிடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கினார். அதுதான் கருடன் படமாக வெளிவந்தது.
இதையும் படியுங்கள்.. Nagarjuna : முதியவரை தரதரவென இழுத்த பவுன்சர்... பதறிப்போன தனுஷ் - மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா
Durai Senthilkumar, Legend saravanan
சூரி, சசிகுமார், ரோஷினி, பிரிகிடா, உன்னி முகுந்தன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த கருடன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த பட ஷூட்டிங்கை சைலண்டாக தொடங்கி இருக்கிறார் துரை செந்தில்குமார். அவர் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
Legend saravanan new Look
ஏற்கனவே லெஜண்ட் என்கிற பிரம்மாண்ட பட்ஜெட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சரவணன், தற்போது துரை செந்தில்குமார் உடன் கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், அப்படத்திற்காக லெஜண்ட் சரவணன் புது கெட்டப்பிற்கும் மாறி இருக்கிறார். கையில் துப்பாக்கியுடன் மிரட்டல் லுக்கில் அவர் காட்சியளிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகிறது.
இதையும் படியுங்கள்.. "நான் தான் அவருக்கு புரபோஸ் பண்ணேன்.. ஆனா இப்போ..” முதல் காதல் குறித்து நடிகை லட்சுமி மேனன் ஓபன் டாக்..