- Home
- Gallery
- ரூ.500 கோடி நெக்லஸ் முதல் ரூ.240 கோடி பிரைவேட் ஜெட் வரை.. நீதா அம்பானியிடம் உள்ள விலையுயர்ந்த பொருட்கள்..
ரூ.500 கோடி நெக்லஸ் முதல் ரூ.240 கோடி பிரைவேட் ஜெட் வரை.. நீதா அம்பானியிடம் உள்ள விலையுயர்ந்த பொருட்கள்..
அரிய கலைப் படைப்புகள் முதல் ஆடம்பர நகைகள் வரை பல்வேறு விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கிறார். தற்போது நீதா அம்பானியிடம் இருக்கும் விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

Nita Ambani
திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும் நிறுவனருமான நீதா அம்பானி, 116.1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர மதிப்புடன் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
Nita Ambani
ஐபிஎல் கிரிக்கெட் அணியின் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கும் நீதா அம்பானி இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆளுமைகளில் ஒருவராக இருக்கிறார். அரிய கலைப் படைப்புகள் முதல் ஆடம்பர நகைகள் வரை பல்வேறு விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கிறார். தற்போது நீதா அம்பானியிடம் இருக்கும் விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
audi a9 chameleon
நீதா அம்பானிக்கு பல ஆடம்பர சொகுசு வாகனங்கள் உள்ளன, இருப்பினும், நீதா அம்பானியின் Audi A9 Chameleon எல்லாவற்றிலிருந்தும் தனித்து நிற்கிறது. கிட்டத்தட்ட 600 குதிரைத்திறன் மற்றும் 4.0 லிட்டர் V8 இன்ஜின் கொண்ட இந்த லிமிடெட் எடிஷன் காரின் மதிப்பு 90 கோடி ரூபாய் இந்த காரின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இதில் எலக்ட்ரானிக் பெயிண்ட் சிஸ்டம் உள்ளது. ஒரே ஒரு பட்டனைக் கொண்டு காரின் வெளிப்புற நிறத்தை மாற்ற முடியும்.
Nita Ambani
நீதா அம்பானி எப்போதும் விலைமதிப்பற்ற ஆடை சேகரிப்புக்காக பெயர் பெற்றவர். பாரம்பரிய உடைகள், குறிப்பாக புடவைகள் மீதான நீதாவின் காதலை யாராலும் மறுக்க முயாது. அந்த வகையில் உலகின் மிக விலை உயர்ந்த புடவையை நீதா அம்பானி வைத்திருக்கிறார். சென்னை சில்க்ஸின் இயக்குனர் சிவலிங்கம் வடிவமைத்த இந்த ஒரு புடவையின் மதிப்பு ரூ. 40 லட்சம் ஆகும். இந்த புடை வைரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புடவைரூபி, மரகதம், முத்துக்கள் மற்றும் பிற அரிய ரத்தினக் கற்களையும் கொண்டுள்ளது. இந்த புடவையின் ஜாக்கெட்டில், கிருஷ்ணரின் படம் எம்ப்ராய்டரி செய்யப்பட்டது இதன் சிறப்பம்சமாகும்.
Nita Ambani
அரிய மதிப்புமிக்க பழங்கால பொருட்களை சேகரிப்பதில் பெயர் பெற்றவர் நீதா அம்பானி. ஜப்பானின் பழமையான கட்லரி தயாரிப்பாளர்களிடமிருந்து ஒரு ஐகானிக் டீ செட்டை நீதா வைத்திருக்கிறார். பிளாட்டினத்தால் டிரிம் செய்யப்பட்ட சீனாவில் இருந்து டீ செட் தயாரிக்கப்பட்டது. மேலும் இது 22 காரட் தங்கத்தால் பதிக்கப்பட்டுள்ளது.
Nita Ambani
நீதா பயன்படுத்தும் லிப்ஸ்டிக் கூட மிகவும் விலை உயர்ந்தது தான். தனது ஆடைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட இந்த லிப்ஸ்டிக்கையே நீதா பயன்படுத்துகிறாராம். இந்த லிப்ஸ்டிக் பேக்கேஜிங் மதிப்பு 40 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Nita Ambani
நீடா அம்பானியிடம் கோடிக்கணக்கான மதிப்புள்ள மிகவும் விலையுயர்ந்த மற்றும் அரிதான வைர நெக்லஸ்கள் உள்ளன. சமீபத்தில் ஆனந்த் மற்றும் ராதிகாவின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ரூ. 400-500 கோடி மதிப்புள்ள பெரிய மரகத பச்சை நெக்லஸை அணிந்திருந்தார்,
Nita ambani
கடந்த மார்ச் மாதம் 71வது உலக அழகி இறுதிப் போட்டியில் பங்கேற்ற போது ரூ. 200 கோடி மதிப்புள்ள முகலாய கால கைகளில் அணியுன் ஆபரணத்தை நீதா அணிந்திருந்தார். இந்த ஆபரணம் முகலாயப் பேரரசர் ஷாஜகானுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
Nita Ambani
2007 ஆம் ஆண்டு, முகேஷ் அம்பானி தனது 54வது பிறந்தநாளில் தனது அன்பு மனைவிக்கு ஆடம்பரமான கார்ப்பரேட் ஜெட் விமானத்தை பரிசாக வழங்கினார். அதன் மதிப்பு 240 கோடியாம்.
Nita Ambani
உலகின் மிக ஆடம்பரமான ஹேண்ட் பேக்களும் நீதா அம்பானியிடம் உள்ளது. அவரது கைப்பை சேகரிப்பில் செல், கோயார்ட், லூயிஸ் உய்ட்டன், பிராடா, ஹெர்ம்ஸ், ஃபெண்டி, மல்பெரிஜிம்மி சூ போன்ற புகழ்பெற்ற பிராண்டுகள் உள்ளன. குறிப்பாக தனது நகைகள் பதிக்கப்பட்ட பர்கின் ஹேண்ட் பேக் அனைவரையும் ஈர்த்தது. அந்த ஹேன் பேக்கில் 18 காரட் தங்கம் மற்றும் 240 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 2.6 கோடி ரூபாய்.