- Home
- Gallery
- Anant Ambani : மொத்த பாலிவுட்டும் இங்க தான் இருக்கு.. களைகட்டிய ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்டி ஹல்தி விழா!
Anant Ambani : மொத்த பாலிவுட்டும் இங்க தான் இருக்கு.. களைகட்டிய ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்டி ஹல்தி விழா!
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஹல்தி விழாஇல், ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டதால் இந்த விழா களைகட்டியது. இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Anant Ambani Radhika Merchant Haldi Function
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் தற்போது களைகட்டி உள்ளது.
Anant Ambani Radhika Merchant Haldi Function
ஏற்கனவே இந்த ஜோடி 2 ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களை நடத்திய நிலையில் தற்போது 3வது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்து வருகின்றனர்.
Anant Ambani Radhika Merchant Haldi Function
ஆனந்த் - ராதிகா ஜோடியின் முதல் ப்ரீ வெட்டிங் நிகழ்சி கடந்த மார்ச் 1 முதல் 3 வரை 3 நாட்கள் கோலாகலமாக நடந்தது.
Anant Ambani Radhika Merchant Haldi Function
குஜராத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த விழாவில் சர்வதேச பிரபலங்கள் பாலிவுட் நட்சத்திரங்கள், பாப் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
Anant Ambani Radhika Merchant Haldi Function
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட்டின் 3 நாள் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களுக்கு ரூ. 1260 கோடி வரை செலவானது என்றும், கேட்டரிங் ஒப்பந்தத்துக்கு மட்டும் ரூ.200 கோடி செலவானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Anant Ambani Radhika Merchant Haldi Function
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்க்கும் ஜூலை 12-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் தொடங்கிய நிலையில் ஏற்கனவே சங்கீத் விழா நடைபெற்றது.
Anant Ambani Radhika Merchant Haldi Function
அந்த வகையில் இன்று ஹல்தி விழா நடந்தது. ஆண்ட்லியாவில் நடந்த இந்த விழாவில் சல்மான் கான், ரன்வீர் சிங் , இயக்குனர் அட்லீ ஜான்வி கபூர், அனன்யா பாண்டே, சாரா அலி கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Anant Ambani Radhika Merchant Haldi Function
அம்பானி குடும்பத்தினர் அனைவரும் இதில் கலந்து கொண்ட நிலையில் இதுதொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.