- Home
- Gallery
- இந்த படங்களை எல்லாம் கண்டிப்பா ஒருமுறையாவது பார்த்திடுங்க.. 2024-ன் டாப் 10 சிறந்த படங்கள் லிஸ்ட்..
இந்த படங்களை எல்லாம் கண்டிப்பா ஒருமுறையாவது பார்த்திடுங்க.. 2024-ன் டாப் 10 சிறந்த படங்கள் லிஸ்ட்..
2024-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியான படங்களில் சிறந்த 10 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
Bramayugam to Aavesham: 8 best Malayalam movies of 2024
2024 தொடங்கி 6 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டு இந்திய திரையுலகில் வெற்றிகரமான ஆண்டாகவே கருதப்படுகிறது. தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டின் முதல் மோசமான ஆண்டாக இருந்தது. எனினும் அரண்மனை, மகாராஜா போன்ற படங்கள் சற்று ஆறுதலை கொடுத்தன. ஆனால் மலையாள சினிமாவுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய ஜாக்பாட் ஆண்டு என்றே சொல்ல வேண்டும். மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம், ஆவேஷம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்துள்ளது மலையாள சினிமா. 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் வெளியான படங்களில் சிறந்த 10 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
லாப்பட்டா லேடீஸ்
பிரபல இயக்குனரும் நடிகர் அமீர் கானின் முன்னாள் மனைவியும் கிரண் ராவ் இயக்கிய லாப்பட்டா லேடீஸ் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நிதான்ஷி கோயல், பிரதீபா ரண்டா, ஸ்பார்ஷ் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
manjummel boys
மஞ்சுமெல் பாய்ஸ்
சிதம்பரம் எழுதி இயக்கி, பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மலையாள படங்களில் ஒன்றாகும்.
Maharaja
மகாராஜா :
விஜய் சேதுபதியின் 50-வது படமாக வெளியான மகாராஜா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படமாக அமைந்துள்ளது. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்த படத்தில் அபிராமி, அனுராக் காஷ்யப், மம்தா மோகந்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Maidaan
மைதான் :
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹிந்தியில் வெளியான மைதான் படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வி அடைந்த படமாக அமைந்தது. அமித் ரவீந்தர்நாத் இயக்கிய இந்த ஸ்போர்ட்ஸ் பயோபிக் படத்தில் அஜய் தேவ்கன், பிரியா மணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Kalki 2898 AD
கல்கி 2898 ஏடி :
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாக் அஸ்வின் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவான கல்கி 2898 ஏடி படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்
Aavesham
ஆவேஷம் :
ஜித்து மாதவன் இயக்கத்தில் ஆக்ஷன் – காமெடி படமாக உருவான ஆவேஷம் படத்தில் ஃபகத் ஃபாசில் லீட் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் வசூலிலும் இப்படம் மாஸ் காட்டியது. இந்த படம் அதிக வசூல் செய்த மலையாள படங்களில் ஒன்றாகவும் மாறி உள்ளது.
Premalu
பிரேமலு :
கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் ரொமாண்டிக் காமெடி படமாக உருவான பிரேமலு படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நஸ்லேன் கே கஃபூர், மமிதா பைஜு உள்ளிட்ட பல நடித்துள்ளனர். இந்த படமும் அதிக வசூல் செய்த மலையாள படங்களில் ஒன்றாக மாறியது.
aadujeevitham
ஆடுஜீவிதம்
பிளெஸ்ஸி இயக்கத்தில் சர்வைவல் டிராமாவாக உருவான ஆடுஜீவிதம் படத்தில் பிருத்விராஜ், அமலா பால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் பிருத்விராஜின் அசாத்திய நடிப்பு பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படமு இந்த ஆண்டு அதிக வசூல் செய்த மலையாள படங்களில் ஒன்றாக மாறியது.
Bramayugam
பிரம்மயுகம் :
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பீரியாடிக்கல் த்ரில்லர் படமாக உருவான இந்த படத்தில் மம்முட்டி, அர்ஜுன் அசோகன் சித்தார்த் பரதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி படமாகவே அமைந்தது.
Guruvayoor Ambalanadayil
குருவாயூர் அம்பலநடையில் :
விபின் தாஸ் இயக்கிய இந்த படத்தில் பிருத்விராஜ், பசில் ஜோசப், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது.