MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி அதிக ரன்கள் குவிப்பார் – யுவராஜ் சிங்!

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி அதிக ரன்கள் குவிப்பார் – யுவராஜ் சிங்!

டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி வலம் வருவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

2 Min read
Rsiva kumar
Published : Jun 03 2024, 04:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
T20 World Cup 2024

T20 World Cup 2024

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நமீபியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இன்று இரவு நடைபெறும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

26
T20 World Cup 2024

T20 World Cup 2024

இந்த தொடருக்கு முன்னதாக வார்ம் அப் போட்டிகள் நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடிய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி பேட்டிங் செய்ய வரவில்லை. ஆனால் அணியில் இடம் பெற்றிருந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பெற்றிருந்தார்.

36
T20 World Cup 2024

T20 World Cup 2024

இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய கோலி 98.66 சராசரியில் 296 ரன்கள் குவித்தார். இதே போன்று இதுவரையில் விளையாடிய 25 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 81.5 சராசரியில் 1141 ரன்களை குவித்துள்ளார். அதோடு, டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

46
T20 World Cup 2024

T20 World Cup 2024

இந்த நிலையில் தான் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி வலம் வருவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இதுவரையில் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து விராட் கோலி முன்னிலையில் இருந்தார். அது போன்று தான் இந்த தொடரிலும் அதிக ரன்கள் குவிப்பார்.

56
T20 World Cup 2024

T20 World Cup 2024

காயத்திலிருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். மேலும், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தங்களது பலத்திற்கு ஏற்றவாறு விளையாடுமாறு வலியுறுத்தியுள்ளார். இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 5 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.

66
T20 World Cup 2024

T20 World Cup 2024

கடந்த 2007 ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை தொடரை வென்றது. இதையடுத்து அரையிறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இன்னும் இறுதிப் போட்டிக்கு வந்து வெற்றி பெற சிறிது காலம் மட்டுமே உள்ளது என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரோகித் சர்மா
விராட் கோலி
யுவராஜ் சிங்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved