காசை மிச்சப்படுத்த சலூன் கடைக்கு போகாம தலையை கொதரி வச்சிருக்காரு – டூப்ளெசிஸை கேலி செய்த ஹர்பஜன் சிங்!
ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் ஹேர்ஸ்டைலுக்கு பணத்தை மிச்சப்படுத்துவதற்காக நல்ல சலூன் கடைக்கு செல்லாமல் தலையை இப்படி கொதரி வச்சிக்கிறார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.
Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 52ஆவது லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில், ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் டாஸ் போடும் நிகழ்விற்கு வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் வந்திருந்தார்.
Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match
அப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், பணத்தை மிச்சப்படுத்த நல்ல சலூன் கடைக்கு செல்லாமல் தலையை இப்படி கொதரி வச்சிருக்கிறார் என்று கேலி செய்தார்.
Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match
மேலும், தானே, தனது கையை பயன்படுத்தி இப்படி செய்திருக்கிறார். இந்த ஹேர்ஸ்டைல் அவருக்கு நன்றாகவே இல்லை. சரி, இருக்கட்டும் நாம் விளையாட்டில் கவனம் செலுத்துவோம், அவரது ஹேர்ஸ்டைல் மீது கவனம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match
உண்மையில், ஃபாப் டூப்ளெசிஸ் ஹேர்ஸ்டைல் பார்ப்பதற்கு ஒன்று அவ்வளவு ஒன்றும் நன்றாக இருந்தது போன்று இல்லை. இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் விதவிதமான வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் காட்சி தருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் தல தோனி. இந்த சீசனில் தோனி, நீண்ட ஹேர்ஸ்டைலில் காட்சி தருகிறார். அவ்வப்போது, தலையில் பின்புறம் சடை போட்டும் தோன்றுகிறார்.
Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match
தோனியைப் போன்று விராட் கோலி இந்த சீசனில் தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த 52ஆவது லீக் போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க வீரர்கள் ஃபாப் டூப்ளெசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match
பவர்பிளேயில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழந்து 92 ரன்கள் எடுத்தது. இதில், ஃபாப் டூப்ளெசிஸ் 23 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 1, ரஜத் படிதார் 2, கிளென் மேக்ஸ்வெல் 4, கேமரூன் க்ரீன் 1 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் வந்த தினேஷ் கார்த்திக் 21 ரன்னும், ஸ்வப்னில் சிங் 15 ரன்னும் எடுக்கவே ஆர்சிபி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match
இந்த வெற்றியின் மூலமாக ஆர்சிபி விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்து 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எஞ்சிய 3 போட்டிகளில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் வாய்ப்பு பெறும். ஆனால், ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட பிளே ஆஃப் வாய்ப்பு இல்லை.
Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match
பணத்தை மிச்சப்படுத்த நல்ல சலூன் கடைக்கு செல்லாமல் தனது கையை தானே பயன்படுத்து தலையை இப்படி கொதரி வைத்திருப்பதாக ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூ ப்ளெசிஸ் ஹேர்ஸ்டைல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கேலி செய்துள்ளார்.